முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மக்கள் துன்பப்படுவதை பா.ஜனதா கட்சியினர் நேரில் பார்க்க வேண்டும்: குஷ்பு ஆவேசம்

திங்கட்கிழமை, 14 நவம்பர் 2016      அரசியல்
Image Unavailable

சென்னை, வங்கி மற்றும் ஏ.டி.எம்.களில் மக்கள் துன்பப்படுவதை பாரதிய ஜனதா கட்சியினர் நேரில் சென்று பார்க்க வேண்டும் என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு ஆவேசமான கூறியுள்ளார்.

கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் உள்ள நேரு சிலைக்கு மாலை அணிவித்த காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு நிருபர்களிடம் கூறியதாவது:- நாட்டில் கருப்பு பணத்தை ஒழிப்பதில் யாருக்கும் மாறுபட்ட கருத்து கிடையாது. ஆனால் பிரதமர் மோடி திட்டமிடாமல் செய்த நடவடிக்கையால் ஏழை மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.ரூபாய் நோட்டை மாற்றும் அறிவிப்பால் மக்கள் பெரும் துன்பப்படுகிறார்கள். வங்கி மற்றும் ஏ.டி.எம்.களில் நீண்ட கியூவில் மக்கள் காத்து கிடக்கிறார்கள். வயதான பெண்கள், முதியவர்கள் எவ்வளவு நேரம்தான் காத்து நிற்க முடியும்? வங்கிகளில் அவர்களுக்காக எந்த வசதியும் செய்து கொடுக்கப்படவில்லை.ஊழலை ஒழிக்க, கருப்பு பணத்தை முடக்க 500, 1000 ரூபாய் நோட்டை செல்லாது என்று அறிவித்ததாக கூறும் மோடி ஏழை, நடுத்தர மக்களை துன்பப்பட வைப்பது ஏன்?வங்கி ஏ.டி.எம். முன்பு நீண்ட கியூவில் பணம் எடுக்க நிற்கிறார்களே? இங்கு ஊழல் செய்தவர்களா நிற்கிறார்கள்?

ஏ.டி.எம்.களில் மக்கள் துன்பப்படுவதை பாரதீய ஜனதா கட்சியினர் நேரில் சென்று பார்க்க வேண்டும். மோடி, கருப்பு பணத்தை ஒழிப்பதற்கு பதில் பொது மக்களை துன்பப்பட வைப்பதை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.முதல்-அமைச்சர் ஜெயலலிதா பரிபூரண குணம் அடைய வேண்டும் என்று அனைவரும் வேண்டுகிறோம். இப்போது அவர் மறுபிறவி எடுத்துள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளார். இது போதாது. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க மக்கள் மத்தியில் அவர் பேச வேண்டும். அப்போதுதான் தேவையற்ற வதந்திகள் வராது.

இவ்வாறு குஷ்பு கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago