முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மக்களை கிரிமினல்கள் போல் நடத்துவதா ? ஜெட்லிக்கு சிவசேனா கண்டனம்

திங்கட்கிழமை, 14 நவம்பர் 2016      அரசியல்
Image Unavailable

மும்பை   - மக்களை கிரிமினல்கள் போல் நடத்துவதா? என்று மத்திய நிதியமைச்சர் ஜெட்லிக்கு சிவசேனா  கண்டனம் தெரிவித்துள்ளது. சிவசேனா மாநிலங்களவை எம்.பி.க்கள் சஞ்சய் ராவத், அனில் தேசாய் ஆகியோர் நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: நாட்டில் 500, 1000 ரூபாய் நோட்டு கள் செல்லாது என்று திடீரென அறிவித்தது சட்டவிரோதமானது. நாட்டு மக்கள் ஒவ்வொருவரையும் கிரிமினல்கள் போல் நடத்தும் விதம் கவலை அளிக்கிறது.

மளிகைக் கடைகள், மருத்துவ சிகிச்சை, போக்குவரத்து, இறுதிச் சடங்கு, பெட்ரோல் நிலையங்கள், அரசுக்கு செலுத்த வேண்டிய தொகை, மற்ற பயன்பாட்டுக்கு செலுத்த வேண்டிய தொகை களை செலுத்துவதில் மக்களுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, 500, 1000 ரூபாய் நோட்டு களை மாற்றுவதற்கு டிசம்பர் 30-ம் தேதி வரை வழங்கப்பட் டுள்ள காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கின்றனர். சுவிஸ் வங்கிகளில் பணத்தை பதுக்கி உள்ளவர்களையும், சாதா ரண பொதுமக்களையும் ஒரே கண்ணோட்டத்தில் மத்திய அரசு பார்க்க கூடாது. இவ்வாறு அவர் கள் கூறியுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்