'புதிய 2000 ரூபாய் நோட்டில் சாயம் போனால் நல்ல நோட்டு : போகாவிட்டால் கள்ள நோட்டு: மத்திய அரசு அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 15 நவம்பர் 2016      வர்த்தகம்
2000rs(N)

புதுடெல்லி  - 'புதிய 2000 ரூபாய் நோட்டுகளில் சாயம் போனால், அது நல்ல நோட்டு; சாயம் போகாவிட்டால், அது கள்ள நோட்டு' என மத்திய பொருளாதார விவகாரத் துறை செயலர் சக்தி காந்த தாஸ் டெல்லியில்  நேற்று விளக்கமளித்தார்.  புதிதாக வெளியிடப்பட்டுள்ள ரூ.2000 நோட்டுகளில் சாயம் போவது தொடர்பாக வெளியாகும் தகவல் குறித்து விளக்கமளித்த அவர், "ரூ.2000 நோட்டுகளில் சாயம் போவதற்குக் காரணம் அதனை அச்சிட பயன்படுத்தப்படும் மை. சாயம் போனால் அது நல்ல நோட்டு. போகாவிட்டால் அது கள்ள நோட்டு என்பதற்கான அடையாளம். புதிய ரூ.100 நோட்டுகளைக்கூட ஈரமாக்கப்பட்ட பஞ்சு கொண்டு தேய்த்தால் லேசாக சாயம் ஒட்டும்" என்றார்.

முன்னதாக, புதிய ரூ.2000 நோட்டுகளை தண்ணீரில் நனைத்தாலோ அல்லது ஈரமான பஞ்சு, துணி கொண்டு தேய்த்தாலோ சாயம் போவதாக பரவலாக கூறப்பட்டது. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. இந்நிலையில், பொருளாதார விவகாரத் துறை செயலர் இத்தகவலை  உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், நாட்டில் உப்பு தட்டுப்பாடில்லை என அவர் கூறினார். உப்பு தட்டுப்பாடு தொடர்பாக வதந்திகள் பரப்பப்படுவதாக அவர் கூறினார். தேவையான அளவு உப்பு இருப்பதாகவும் நாடு முழுவதும் அத்தியாவசியப் பொருட்கள் இருப்பு குறித்து ஆய்வு மேற்கொள்ள அமைச்சரவை செயலர் ஒரு கண்காணிப்புக் குழுவை அமைக்கும் பணியில் ஈடுப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார

இதை ஷேர் செய்திடுங்கள்: