பெட்ரோல் - டீசல் விலை குறைந்தன

செவ்வாய்க்கிழமை, 15 நவம்பர் 2016      வர்த்தகம்
Image Unavailable

புதுடெல்லி : பெட்ரேல் விலை லிட்டருக்கு ரூ.1.46 காசும், டீசல் லிட்டருக்கு ரூ.1.53 காசும் குறைந்தது. இந்த விலை குறைப்பு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.

பெட்ரோல், டீசல் விலைகளை  மாற்றி அமைப்பது தொடர்பான அறிவிப்புகளை எண்ணெய் நிறுவனங்கள் 15 நாட்களுக்கு ஒரு முறை அறிவித்து வருகின்றன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிர்ணயத்தை ஒட்டி இந்த விலை மாற்ற அறிவிப்பை இந்தியன் ஆயில், இந்தூஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் நிறுவனங்கள் அமல்படுத்தி வருகின்றன.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை திடீர் மாற்றம் அடையும் நிலையில், அதன் விலையை அரசு ஒரே நிலையில் வைக்கக்கூடாது. இதனால் பெரும் நஷ்டம் ஏற்படுகிறது என எண்ணெய் நிறுவனங்கள் கூறி வந்தன. இதனால் எண்ணெய் விலை மாற்ற அறிவிப்பை, அரசு கைவிட்டு எண்ணெய் நிறுவனங்களே விலையை நிர்ணயிக்கலாம் என அறிவித்தது. இதன் படி தற்போது எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை 15 நாட்களுக்கு ஒரு முறை மாற்றி அமைத்து வருகின்றன. இதன்படி, நேற்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.46 காசும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.1.53 காசும் குறைக்கப்பட்டது. இந்த விலை குறைப்பு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.


இதை ஷேர் செய்திடுங்கள்: