முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2-வது கிரிக்கெட் டெஸ்ட்டில் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு - இங்கிலாந்து 2 விக்கெட்டுக்கு 87 ரன்

ஞாயிற்றுக்கிழமை, 20 நவம்பர் 2016      விளையாட்டு
Image Unavailable

விசாகப்பட்டினம் :  விசாகப்பட்டினம் 2வது கிரிக்கெட் டெஸ்ட்டில் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் இரு விக்கெட்டுகள் இழப்புக்கு 87 ரன் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி வெற்றி பெறும் நிலையில்  உள்ளது. இங்கிலாந்து கிரிக்கெட் அணி  கேப்டன் அலிஸ்டர் குக் தலைமையில் தற்போது இந்திய பயணம் மேற்கொண்டுள்ளது.

இரு அணிகள் இடையே  5டெஸ்ட் கொண்ட தொடர் நடக்கிறது.  தற்போது இந்திய அணிக்கும், இங்கிலாந்து அணிக்கும் விசாகப்பட்டிணத்தில் 2வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது.  இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் இந்திய அணி  455 ரன்னும் இங்கிலாந்து அணி 255ரன்னும் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி 63.1 ஓவரில்  204ரன் எடுத்தது. இதில் கேப்டன் விராட் கோலி அதிகப்பட்சமாக 81 ரன் குவித்தார். அவர்  109 பந்துகள் ஆடி 4பவுன்டரிகளை விளாசினார்.இங்கிலாந்து பந்து வீச்சாளர் எஸ்.பிராட்  33ரன்னுக்கு  4விக்கெட் கைப்பற்றினார்.

இதனைத்தொடர்ந்து இங்கிலாந்து அணி 405ரன் எடுத்தால் வெற்றி என்கிற நிலையில் தனது இரண்டாவது இன்னிங்சை நேற்று துவங்கியது.  இந்திய அணியின் பந்து வீச்சை ஆட முடியாமல் இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் தடுமாறினார்கள். கேப்டன் குக் அணி தோல்வியை தவிர்க்க போராடினார். அவர் நேற்றைய ஆட்ட முடிவில்  188 பந்துகளில் 54ரன் எடுத்த போது ஆட்டமிழந்தார். குக்கிற்கு இது 53வது அரை சதமாகும்.

அவரது விக்கெட்டை ரவீந்திர ஜடேஜா கைப்பற்றினார். 4வது நாள் ஆட்டத்தின் கடைசி பந்தில் அவரது விக்கெட் விழுந்தது.  அவருடன் ஜோடி சேர்ந்து  3மணி நேரம் நிலைத்துஆடிய ஹமீத்  25 ரன் எடுத்தார். அவரது விக்கெட்டை அஸ்வின் கைப்பற்றினார். இன்று 5வது இறுதி நாள் ஆட்டம் நடக்கிறது. இதில் மேலும் இங்கிலாந்து  308ரன் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற நிலை உள்ளது. இந்த 2வது டெஸ்ட்டில் இந்தியா வென்று 5 டெஸ்ட்  கொண்ட தொடரை  1-0 ஆட்ட கணக்கில் முன்னிலை பெறும் வாய்ப்பு உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்