முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இன்று கடைசி டெஸ்ட்: ஆஸ்தி. அணியை 'ஒயிட்வாஷ்' செய்யும் முனைப்பில் தென்னாப்பிரிக்கா !

புதன்கிழமை, 23 நவம்பர் 2016      விளையாட்டு
Image Unavailable

அடிலெய்ட் : தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக முதல் 2 டெஸ்டில் தோற்று தொடரை இழந்த ஆஸ்திரேலியா, இன்று நடைபெறும் கடைசி போட்டியில் வென்று ஆறுதல் வெற்றி பெறுமா? என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அந்த அணியை ஒயிட்வாஷ் செய்யும் முனைப்பில் தென்னாப்பிரிக்க அணி உள்ளது.

டு பிளிஸ்சிஸ் தலைமையிலான தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 டெஸ்ட் போட்டி தொடரில் தென்ஆப்பிரிக்கா முதல் 2 டெஸ்டில் வென்று தொடரை கைப்பற்றி இருந்தது . பெர்த் டெஸ்டில் 177 ரன் வித்தியாசத்திலும், ஹோபர்ட் டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 80 ரன் வித்தியாசத்திலும் வெற்றி பெற்று இருந்தது.

ஆஸ்திரேலியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அடிலெய்ட்டில் இன்று தொடங்குகிறது. இந்த டெஸ்ட் பகல்-இரவாக நடக்கிறது. தென்ஆப்பிரிக்கா அணி முதல்முறையாகவும், ஆஸ்திரேலியா 2-வது தடவையாகவும் பகல்-இரவு டெஸ்டில் விளையாடுகிறது. ஒட்டு மொத்தில் நடைபெறும் 3-வது பகல்-இரவு டெஸ்ட் ஆகும்.

முதல் 2 டெஸ்டில் தோற்று தொடரை இழந்த ஆஸ்திரேலியா இந்த டெஸ்டிலாவது வென்று ஆறுதல் வெற்றி பெறுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடர் தோல்வியால் ஆஸ்திரேலிய அணியில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 6 வீரர்கள் மாற்றப்பட்டு உள்ளனர். 3 புதுமுக வீரர்கள் இந்த டெஸ்டில் அறிமுகம் ஆகிறார்கள். வெற்றி பெற வேண்டிய நெருக்கடி அந்த அணி வீரர்களுக்கு உள்ளது.

தென்ஆப்பிரிக்க அணி இந்த டெஸ்டிலும் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றி ஆர்வத்தில் உள்ளது. தொடர்ச்சியாக 3 டெஸ்ட் தொடரை வென்று அந்த அணி ‘ஒயிட்வாஷ்’ வேட்கையில் உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago