முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சர்வதேச டெஸ்ட் தரவரிசை: பேட்ஸ்மேன்-விராட்கோலி 4-வது இடம், பந்து வீச்சு - அஸ்வின் ‘நம்பர் ஒன்’

புதன்கிழமை, 23 நவம்பர் 2016      விளையாட்டு
Image Unavailable

துபாய் : சர்வசேத டெஸ்ட் பேட்ஸ்மேன்களின் தரவரிசை பட்டியலில் விராட்கோலி முதல்முறையாக 10 இடங்கள் முன்னேறி 4-வது இடத்தை பிடித்துள்ளார். பந்து வீச்சு மற்றும் ஆல் ரவுண்டர்களில் அஸ்வின் ‘நம்பர் ஒன்’ இடத்தில் நீடிக்கிறார்.

விசாகப்பட்டினத்தில் நடந்து முடிந்த இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 246 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை ருசித்தது. இதைத் தொடர்ந்து டெஸ்ட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) வெளியிட்டது.

இதன்படி பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் இந்திய கேப்டன் விராட் கோலி கிடுகிடுவென ஏற்றம் கண்டுள்ளார். விசாகப்பட்டினம் டெஸ்டில் 167 ரன், 81 ரன்கள் வீதம் குவித்து ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்ட விராட் கோலி 97 தரவரிசை புள்ளிகளை கூடுதலாக சேகரித்து, 10 இடங்கள் முன்னேறி 4-வது இடத்தை பிடித்துள்ளார். அவரது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் இதுவே சிறந்த தரவரிசையாகும். இதற்கு முன்பு 10-வது இடத்தை தாண்டியதில்லை.

முதல்முறையாக 800 புள்ளிகளை கடந்த விராட் கோலி மொத்தம் 822 புள்ளிகள் பெற்று இருக்கிறார். 800 புள்ளி என்ற மைல்கல்லை கடந்த 11-வது இந்திய பேட்ஸ்மேன் என்ற சிறப்பையும் அவர் பெற்றார். டி-20 போட்டி தரவரிசையில் முதலிடம், ஒரு நாள் போட்டியில் 2-வது இடம் வகிக்கும் விராட் கோலி வருகிற 26-ம் தேதி மொகாலியில் தொடங்கும் இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்டிலும் இதே போன்று அசத்தினால் முதலிடத்தை நெருங்கும் வாய்ப்பு உருவாகும்.

விசாகப்பட்டினம் டெஸ்டில் 119 ரன்கள் விளாசிய மற்றொரு இந்திய வீரர் புஜாரா 10-வது இடத்தில் இருந்து 9-வது இடத்துக்கு வந்துள்ளார். மற்ற இந்திய வீரர்கள் ரஹானே 11-வது இடத்திலும் (2 இடம் சரிவு), முரளிவிஜய் 23-வது இடத்திலும் (மாற்றம் இல்லை), இங்கிலாந்து வீரர்கள் ஜானி பேர்ஸ்டோ 12-வது இடத்திலும் (4 இடம் உயர்வு), பென் ஸ்டோக்ஸ் 28-வது இடத்திலும் (5 இடம் ஏற்றம்) உள்ளனர்.

பந்து வீச்சு - ஆல் ரவுண்டர்களில் அஸ்வின் ‘நம்பர் ஒன்’:

பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் இந்திய வீரர் அஸ்வின் முதலிடத்தில் நீடிக்கிறார். 2-வது டெஸ்டில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் 14 தரவரிசை புள்ளிகளை அதிகமாக பெற்றுள்ள அவர் மொத்தம் 895 புள்ளிகளுடன் தனது நிலையை வலுப்படுத்தியுள்ளார். மற்றொரு இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா ஒரு இடம் உயர்ந்து 6-வது இடத்தில் இருக்கிறார். வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி 5 இடங்கள் எகிறி 21-வது இடத்தை பெற்றுள்ளார்.

ஆல்-ரவுண்டர்களின் தரவரிசையிலும் தமிழகத்தை சேர்ந்த அஸ்வின் (469 புள்ளி) முதலிடத்தில் தொடருகிறார். அடுத்த இரு இடங்களில் வங்காளதேசத்தின் ஷகிப் அல்-ஹசன் (405 புள்ளி), இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் (342 புள்ளி) ஆகியோர் உள்ளனர். ரவீந்திர ஜடேஜா 6-வது இடம் வகிக்கிறார்.

டாப்-10 பேட்ஸ்மேன்கள்:
1) ஸ்டீவன் சுமித்                       -     ஆஸ்திரேலியா      -       897 புள்ளிகள்.
2) ஜோ ரூட்                                 -     இங்கிலாந்து           -       844 புள்ளிகள்.
3) வில்லியம்சன்                        -      நியூசிலாந்து           -       838 புள்ளிகள்.
4) விராட் கோலி                         -      இந்தியா                  -       822 புள்ளிகள்.
5) அம்லா                                    -      தென்ஆப்பிரிக்கா    -       809 புள்ளிகள்.
6) யூனிஸ்கான்                           -      பாகிஸ்தான்            -       790 புள்ளிகள்.
7) டிவில்லியர்ஸ்                        -      தென்ஆப்பிரிக்கா    -       786 புள்ளிகள்.
8) டேவிட் வார்னர்                       -     ஆஸ்திரேலியா       -       784 புள்ளிகள்.
9) புஜாரா                                       -     இந்தியா                  -        768 புள்ளிகள்.
10) அலஸ்டயர் குக்                     -      இங்கிலாந்து           -        760 புள்ளிகள்.

டாப்-10 பவுலர்கள்:

1) அஸ்வின்                                   -      இந்தியா                 -  895 புள்ளிகள்.
2) ஹெராத்                                     -      இலங்கை               -  867 புள்ளிகள்.
3) ஸ்டெயின்                                  -      தென்ஆப்பிரிக்கா   -  852 புள்ளிகள்.
4) ஜேம்ஸ் ஆண்டர்சன்                  -      இங்கிலாந்து           - 850 புள்ளிகள்.
5) ஸ்டூவர்ட் பிராட்                          -      இங்கிலாந்து          - 820 புள்ளிகள்.
6) ரவீந்திர ஜடேஜா                         -       இந்தியா                 - 795 புள்ளிகள்.
7) யாசிர் ஷா                                    -      பாகிஸ்தான்           - 789 புள்ளிகள்.
8) மிட்செல் ஸ்டார்க்                       -      ஆஸ்திரேலியா      - 775 புள்ளிகள்.
9) ஹேசில்வுட்                                -      ஆஸ்திரேலியா      - 770 புள்ளிகள்.
10) பிலாண்டர்                                 -      தென்ஆப்பிரிக்கா    - 761 புள்ளிகள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago