முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விராட்கோலி பந்தை சேதப்படுத்தும் செயலில் ஈடுபடவில்லை - அனில் கும்பிளே

வியாழக்கிழமை, 24 நவம்பர் 2016      விளையாட்டு
Image Unavailable

மொஹாலி : ராஜ்கோட்டில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் போது விராட்கோலி பந்தை சேதப்படுத்தும் செயலில் ஈடுபடவில்லை என்று இந்திய அணியின் பயிற்சியாளர் அனில் கும்பிளே, மறுப்பு தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டின் போது தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டூ பிளஸிஸ் பந்தை சேதப்படுத்தியது உறுதி செய்யப்பட்டதையடுத்து அவருக்கு போட்டிக்கட்டணத்தை முழுமையாக அபராதமாக விதித்து ஐ.சி.சி நடவடிக்கை எடுத்தது. இந்த நிலையில், இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மீது பந்தை சேதப்படுத்தியதாக புகார் எழுந்தது. ராஜ்கோட்டில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி போராடி டிரா செய்தது. இந்த டெஸ்டின் போது அவர் பந்தை சேதப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டதாக இங்கிலாந்து பத்திரிகை ஒன்று கடந்த சில தினங்களுக்கு முன் செய்தி வெளியிட்டது.

விராட் கோலி வாயில் போட்டிருந்த சுவிங்கம் போன்ற ஒரு பொருள் மீது வலது கைவிரலால் நன்கு அழுத்தி தடவி விட்டு, அதன் பிறகு பந்தின் பளபளப்பு தன்மையை மாற்றுவதற்காக அதன் ஒரு பகுதியில் தேய்ப்பது போன்ற வீடியோ காட்சிகளையும் அந்த பத்திரிகை வெளியிட்டது.

இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் பயிற்சியாளர் அனில் கும்பிளே, முதலில்  ஊடகங்களில் கூறப்படும் எந்த விஷயத்திற்கும் நான் கருத்து சொல்லப்போவது இல்லை. நடுவரோ அல்லது போட்டி ரெஃப்ரியோ யாரும் எங்களிடம் இது பற்றி பேசவில்லை. எனவே இந்த கதைக்கு அதிக கவனம் கண்டிப்பாக கொடுக்க போவது இல்லை. இதில் வருத்தப்படுவதற்கு எதுவுமே இல்லை. அவர்கள் விரும்புவதை ஊடகங்களில் சொல்லலாம், எழுதலாம். எங்களை பொறுத்தவரை, எந்த ஒரு வீரரும் இத்தகைய செயலில் ஈடுபடவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்