முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பண விநியோகத்தில் பாரபட்சமா ஏன் ? ரிசர்வ் வங்கிக்கு கெஜ்ரிவால் கேள்வி

வெள்ளிக்கிழமை, 25 நவம்பர் 2016      அரசியல்
Image Unavailable

புதுடெல்லி, ரிசர்வ் வங்கி மற்ற பிற வங்கிகளுக்கு ஒரே சீராக நியாயமான முறையில் பண விநியோகம் செய்கிறதா என டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளருமான அர்விந்த் கேஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.

ரூ.500, 1000 நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி கடந்த 8-ம் தேதி அறிவித்தார். இந்நிலையில், ரிசர்வ் வங்கி மற்ற பிற வங்கிகளுக்கு ஒரே சீராக நியாயமான முறையில் பண விநியோகம் செய்கிறதா என கேஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.

அண்மையில்,  இந்த நடவடிக்கைக்குப் பின்னர் ரிசர்வ் வங்கி ஒரு குறிப்பிட்ட வங்கிக்கு ரூ.42 லட்சம் பணம் விநியோகம் செய்திருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. அந்த வங்கிக்கு வெறும் 4,000 வாடிக்கையாளர்களே இருக்கின்றனர் என்றும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதேவேளையில், 1.5 லட்சம் வாடிக்கையாளர்களுடன் 35 கிளைகள் கொண்ட ஒரு வங்கிக்கு வெறும் ரூ.3 லட்சம் மட்டுமே ரிசர்வ் வங்கி விநியோகித்துள்ளது என்றும் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.  இவற்றைச் சுட்டிக்காட்டிய கெஜ்ரிவால், "ரிசர்வ் வங்கி மற்ற பிற வங்கிகளுக்கு ஒரே சீராக நியாயமான முறையில் பண விநியோகம் செய்கிறதா?" என கேள்வி எழுப்பினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago