முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன்: பி.வி. சிந்து அரையிறுதிக்கு முன்னேற்றம்

வெள்ளிக்கிழமை, 25 நவம்பர் 2016      விளையாட்டு
Image Unavailable

ஹாங்காங், ஹாங்காங் ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் தொடரில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

ஹாங்காங்கில் உள்ள கவ்லூனில் ஹாங்காங் ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. பெண்களுக்கான காலிறுதி போட்டி ஒன்றில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திர வீராங்கனை பி.வி. சிந்து, சிங்கப்பூரின் சியாவோயு லியாங்கை எதிர்கொண்டார்.

முதல் செட்டை 21-17 என பி.வி. சிந்து கைப்பற்றினார். ஆனால் 2-வது செட்டை கடுமையாகப் போராடி 21-23 என இழந்தார். இதனால் வெற்றியை நிர்ணயிக்கும் 3-வது சுற்றில் சாய்னா முழுத்திறமையையும் வெளிப்படுத்தி விளையாடினார். இதன் காரணமாக அந்த செட்டை 21-18 எனக் கைப்பற்றினார். இறுதியில் 2-1 என சிங்கப்பூர் வீராங்கனையை வீழ்த்தி பி.வி. சிந்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்