முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இயக்குனர்கள் சங்கம் ரத்தாகவில்லை ஆர்.கே.செல்வமணி விளக்கம்

சனிக்கிழமை, 26 நவம்பர் 2016      சினிமா
Image Unavailable

சென்னை, புதுப்பிப்பு விண்ணப்பம் அளிப்பதில் ஏற்பட்ட தாமதத்தால்தான் சங்கப்பதிவு ரத்து செய்யப்பட்டது. தற்போது புதுப்பிக்க முறைப்படி விண்ணப்பம் அனுப்பப்பட்டுள்ளதாக இயக்குனர் ஆர்.கே.செல்வமணி விளக்கம் அளித்துள்ளார்.

இது குறித்து சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது:-

சங்கம் புதிப்பித்தல் தொடர்பாக பல்வேறு வதந்திகள் பரப்பி விடப்படுகின்றன. ஆனால் உண்மை அதுவல்ல. தொழிலாளர் அலுவலகத்துக்கு உரிய காலத்தில் புதுப்பிப்பு மனு அளித்திருந்தோம். ஆனால் அவர்கள் அதற்கான பதில் கடிதங்களை பழைய முகவரிக்கு அனுப்பியதால் எங்களால் உரிய நேரத்தில் புதுப்பிப்பு மனு அளிக்க முடியவில்லை. இதனால் தான் ரத்து ஆனது.கடந்த 24.11.2016 அன்று பொதுக்குழு கூடி முடிவெடுத்து புதிய அலுவலக முகவரியில் இருந்து தொடர்புடைய துறைக்கு வேண்டுகோள் கடிதம், புதுப்பிப்பு மனு அளித்துள்ளோம். நல்ல முடிவுக்காக காத்திருக்கிறோம். எங்கள் சங்கத்தில் இணைய முடியாதவர்கள் தவறான தகவலை பரப்பி வருகிறார்கள் . நம்ப வேண்டாம் என அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்