முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நியூசிலாந்திற்கு எதிரான 2-வது டெஸ்ட்: பாகிஸ்தான் 5 விக்கெட் இழப்பிற்கு 76 ரன்கள் எடுத்து திணறல்

சனிக்கிழமை, 26 நவம்பர் 2016      விளையாட்டு
Image Unavailable

ஹாமில்டன் : நியூசிலாந்திற்கு எதிரான 2-வது டெஸ்டில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 2-வது நாள் ஆட்டம் முடிவில் 76 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுக்களை இழந்து திணறி வருகிறது.

நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஹாமில்டனில் நேற்று முன்தினம் தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி நியூசிலாந்து அணியின் முதல் இன்னிங்சை தொடங்கியது. அந்த அணி 39 ரன்கள் எடுப்பதற்குள் இரண்டு விக்கெட்டுக்களை இழந்தது. 3-வது விக்கெட்டுக்கு ராவல் உடன் ராஸ் டெய்லர் ஜோடி சேர்ந்தார். நியூசிலாந்து அணி 21 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 77 ரன்கள் எடுத்திருக்கும்போது மழை பெய்தது. இதனால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.

மழை தொடர்ந்து பெய்ததால் அத்துடன் முதல் நாள் ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டதாக நடுவர்கள் அறிவித்தனர். ஆகவே 21 ஓவர்களுடன் முதல்நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. ராவல் 35 ரன்னுடனும், டெய்லர் 29 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். நேற்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ராவல், டெய்லர் தொடர்ந்து ஆட்டத்தை தொடங்கினார்கள். ராவல் அரைசதம் அடித்து 55 ரன்னில் ஆட்டம் இழந்தார். டெய்லர் 37 ரன்னில் பெவிலியன் திரும்பினார்.

அதன்பின் வந்த கிராண்ட்ஹோமே 37 ரன்னும், வாட்லிங் அவுட்டாகாமல் 49 ரன்களும் எடுக்க நியூசிலாந்து அணி முதல் இன்னி்ங்சில் 271 ரன்கள் சேர்த்து ஆல் அவுட் ஆனது. பாகிஸ்தான் அணி சார்பில் சோஹைல் கான் 4 விக்கெட்டும், இம்ரான் கான் 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். பின்னர் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. நியூசிலாந்து அணியின் சவுத்தி மற்றும் வாக்னர் ஆகியோரின் வேகத்தில் பாகிஸ்தான் வீரர்கள் நிலைகுலைந்தனர். அந்த அணியின் சமி அஸ்லாம் (5), அசார் அலி (1), யூனிஸ்கான் (2) அடுத்தடுத்து சவுத்தி பந்தில் ஆட்டம் இழந்தனர். ஆசாத் ஷபிக் (23), மொகமது ரிஸ்வான் (0) வாக்னர் பந்தில் ஆட்டம் இழந்தனர்.

பாபர் ஆசம் அவுட்டாகாமல் 34 ரன்கள் எடுக்க, பாகிஸ்தான் 2-வது நாள் ஆட்டம முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 76 ரன்கள் எடுத்துள்ளது. பாபர் ஆசம் 34 ரன்னுடனும், சர்பிராஸ் அகமது 9 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்