முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

3-வது டெஸ்ட்டில் இந்தியா 6 விக்கெட்டுக்கு 271 ரன் - கோலி, அஸ்வின் ரன் குவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 27 நவம்பர் 2016      விளையாட்டு
Image Unavailable

விசாகப்பட்டிணம் :  இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது கிரிக்கெட் டெஸ்ட்டின் இரண்டாவது நாள் ஆட்டத்தின் போது இந்தியா 6 விக்கெட் இழப்புக்கு  271ரன் குவித்தது.  கேப்டன் கோலி 62 ரன்னும், அஸ்வின்(அவுட் ஆகாமல்) 57 ரன்னும் எடுத்தனர்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி தற்போது இந்திய அணியுடன் 5 டெஸ்ட் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இந்த அணிகள் இடையே நடந்த முதல் டெஸ்ட் போட்டி டிரா ஆனது. இரண்டாவது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டிணத்தில் நடந்தது. அதில் இந்திய அணி மகத்தான வெற்றி பெற்று தற்போது டெஸ்ட் தொடரில் 1-0 ஆட்ட கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

இந்த நிலையில் பஞ்சாப் மாநிலம் மொகாலியில் இந்த அணிகள் மோதும் 3வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி நடக்கிறது. இதில் முதலில் ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 283 ரன் எடுத்தது.

அந்த அணியின் வீரர் ஜான் பேர்ஸ்டோ 89 ரன், ஜாஸ் பட்லர் 43ரன்,  எடுத்தனர். இந்திய பந்து வீச்சாளர்  முகமது ஷமி  63 ரன்னுக்கு 3 விக் கெட்டும், உமேஷ் யாதவ் 58ரன்னுக்கு 2 விக்கெட்டும்  ஜெயந்த் யாதவ்  49ரன்னுக்கு 2 விக்கெட்டும் எடுத்தார்கள்.

இதனைத்தொடர்ந்து ஆடிய இந்தியா  நேற்று இரண்டாவது நாள் ஆட்ட முடிவில்  6 விக்கெட் இழப்புக்கு 271 ரன் எடுத்தது. கேப்டன் விராட் கோலி 62 ரன்னும் (9பவுன்டரி)அஸ்வின் 57 (அவுட் இல்லை) ரன்னும் எடுத்தனர். அணியில் செட்டேவர்  புஜாரா  51 ரன் அடித்தார்.   அடில் ரஷித் 81 ரன்னுக்கு 3 விக்கெட் கைப்பற்றினார்.

இந்திய அணி இங்கிலாந்தின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை காட்டிலும் 12ரன் குறைவாக உள்ளது. இன்னும் 4 விக்கெட்டுகள் உள்ள நிலையில் இந்தியா அதிக அளவில் ரன் குவித்து இங்கிலாந்துக்கு நெருக்கடி அளிக்கும்.

அஸ்வினும், ரவிந்திர ஜடேஜாவும் 7 வது விக்கெட்டுக்கு 67 ரன் சேர்த்தார்கள். ஜடேஜா 59 பந்துகளில் அவுட் ஆகாமல் 31 ரன் விளாசினார். அவரது ரன் மின்னல் வேகத்தில் வந்தது.ஜடேஜா ரன்னில்  3பவுன்டரிகள் ஒரு சிக்சர் ஆகியவை இடம் பெற்றிருந்தன.

அஸ்வின் தற்போது 9வது அரை சதத்தை டெஸ்ட் போட்டிகளில் பெற்றுள்ளார். அவர் இந்த தொடரில் 70, 32, 57, 7, 57(அ.இ) என எடுத்து தனது பேட்டிங் வலிமையை உறுதிபடுத்தியுள்ளார். அவர்  நேற்றைய ஆட்டத்தில் 81 பந்துகளில்  8 பவுன்டரிகள் விளாசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்