முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹாங்காங் ஓபன் பாட்மிண்டன் இறுதிப்போட்டி: பி.வி.சிந்து போராடி தோல்வி

ஞாயிற்றுக்கிழமை, 27 நவம்பர் 2016      விளையாட்டு
Image Unavailable

கோவ்லூன் : ஹாங்காங் ஓபன் பாட்மிண்டன் இறுதிப்போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து போராடி தோல்வியை தழுவினார். அவரது தோல்வியை தொடர்ந்து  ஆடவர் பிரிவிலும் இந்திய வீரர் சமீர் வர்மா தோல்வியை தழுவி வெளியேறினார்.

ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் போட்டி கோவ்லூன் நகரில் நடைபெற்றது.இதில்  நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் போட்டியில்  ஹாங்காங்கின் சென் நகன் யியை  இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்துவீழ்த்தினார்., இந்த வெற்றி மூலம்சிந்து  இறுதி போட்டிக்கு  தகுதி பெற்றார்.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில்  சீன தைபே வீராங்கனை டாங் சூ யிங்யியை  பி.வி.சிந்து எதிர்கொண்டார். இதில் தொடக்கத்திலேயே தனது ஆதிக்கத்தை வெளிப்படுத்திய டாங் சூ யிங்யிடம் 15-21, 17-21 என்ற நேர் செட்களில் சிந்து போராடி தோற்றார்.

இந்த தோல்வியால் துபாய் உலக சீரிஸ் பைனல்ஸ் தொடரில் சிந்து பங்கேற்பது கேள்விக்குறியாகியுள்ளது. பிரேசிலில் உள்ள ரியோடி ஜெனிரோவில் 31வது  ஒலிம்பிக் போட்டி கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்தது. அந்த போட்டியில் அற்புதமாக ஆடிய இந்திய பாட்மிண்டன் வீராங்கனை  பி.வி.சிந்து வெள்ளி பதக்கம் வென்றார். ஒலிம்பிக்கில்  பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவிற்கு முதல் முறையாக வெள்ளி பதக்கம் பெற்ற பெருமையும் அவருக்கு கிடைத்தது.

ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற சிந்து அண்மையில் நடந்து முடிந்த சீன ஓபன் சூப்பர் சீரிஸ் போட்டியிலும் முதல்முறையாக பட்டம் வென்று அசத்தினார்

ஹாங்காங்கில் தற்போது நடந்து வரும் ஓபன் பாட்மிண்டன் போட்டியில், பி.வி.,சிந்து தோல்வியை தொடர்ந்து  ஆடவர் பிரிவிலும் இந்தியா தோற்றது. ஆடவர் ஒற்றையர் இறுதிச்சுற்றில் முதல் முறையாக நுழைந்த இந்தியாவின் சமீர் வெர்மாவும் தோல்வியை சந்தித்தார்.

இறுதிப்போட்டியில் ஹாங்காங்கின் அன்கஸ் கா லாங்கை எதிர்கொண்ட இந்தியாவின் சமீர் வர்மா முதல் செட்டை 14-21 என பறிகொடுத்தார். இதையடுத்து சுதாரித்து ஆடிய அவர் 21-10 என இரண்டாவது செட்டை அதிரடியாக கைப்பற்றி அன்கஸ்க்கு அதிர்ச்சியளித்தார். இருப்பினும் மூன்றாவதுசெட்டை  தனதாக்க முயன்ற சமீர் 11-21 என பறிகொடுத்து தோல்வியை தழுவினார்.சமீர் வர்மா சூப்பர் சீரிஸ் வகை போட்டியொன்றில் இறுதிப்போட்டி  வரை தற்போதைய போட்டியில்தான் முன்னேறி இருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்