முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சட்டத்துக்குப் புறம்பான முறையில் வாக்குகளைப் பெற்றார் ஹிலாரி: டொனால்ட் ட்ரம்ப் குற்றச்சாட்டு

திங்கட்கிழமை, 28 நவம்பர் 2016      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தலில் ஹிலாரி கிளிண்டன் சட்டத்துக்குப் புறம்பான முறையில் லட்சக்கணக்கான வாக்குகளைப் பெற்றார் என டொனால்டு ட்ரம்ப் குற்றம்சாட்டியுளார்.  இது குறித்து தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் ட்ரம்ப் கூறியிருப்பதாவது ,

''அமெரிக்க அதிபர் தேர்தலில் சட்டத்துக்குப் புறம்பான முறையில் ஹிலாரி பெற்ற வாக்குகளை நீக்கினால் பாப்புலர் வோட்டிங் (மக்கள் வாக்கு) முறையிலும் நானே வெற்றி பெற்றிருப்பேன்.

அதிபர் தேர்தல் பிரச்சாரங்களின்போது, 3 அல்லது 4 மாகாணங்களில் மட்டுமே நான் பிரச்சாரம் செய்தேன்.  சிறிய மாகாணங்களில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளவில்லை. ஒருவேளை விடுபட்ட இடங்களில் பிரச்சாரம் செய்திருந்தால் தேர்வாளர்கள் வாக்குகளில் வெற்றி பெற்றதைப் போல பாப்புலர் வோட்டிங் (மக்கள் வாக்கு) முறையிலும் நானே வெற்றி பெற்றிருப்பேன்.

தேர்தலின்போது வெர்ஜினியா, நியூ ஹாம்ஷிர், கலிஃபோர்னியா மாகாணங்களில் நடந்த வாக்கு மோசடி பற்றி ஏன் ஊடகங்கள் பதிவு செய்யவில்லை. ஊடகங்கள் ஒருதலைப் பட்சமாக நடந்து கொள்கின்றன" என்று பதிவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago