முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விகாஸ் கிரிஷனுக்கு சிறந்த ‘குத்துச் சண்டை வீரர்’ விருது - சர்வதேச குத்துச்சண்டை சங்கம் வழங்குகிறது

திங்கட்கிழமை, 28 நவம்பர் 2016      விளையாட்டு
Image Unavailable

புதுடெல்லி : சர்வதேச குத்துச் சண்டை சங்கம் இந்தியாவின் குத்துச் சண்டை வீரரான விகாஸ் கிரிஷன் யாதவுக்கு ‘சிறந்த குத்துச் சண்டை வீரர்’ விருதை வழங்க இருக்கிறது.

இந்தியாவின் பிரபல குத்துச் சண்டை வீரர் விகாஸ் கிரிஷன் யாதவ். 24 வயதாகும் ஆசிய போட்டியில் தங்க பதக்கம் வென்றனர். இந்த வருடம் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியதற்காக சர்வதேச குத்துச் சண்டை சங்கம் அவருக்கு சிறந்த குத்துச் சண்டை வீரர் விருதை வழங்க இருக்கிறது. அடுத்த மாதம் 20-ந்தேதி சர்வதேச குத்துச்சண்டை சங்கத்தின் 70-வது ஆண்டு விழா நடக்கிறது. அப்போது இந்த விருது வழங்கப்பட இருக்கிறது. இதுகுறித்து விகாஸ் கிரிஷனுக்கு இச்சங்கம் கடிதம் எழுதியுள்ளது.

2010-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய போட்டியில் தங்க பதக்கம் வென்ற விகாஸ், 2014-ம் ஆண்டு போட்டியில் வெண்கல பதக்கம் வென்றார். இந்த விருதை வாங்கும் முதல் இந்திய குத்துச்சண்டை வீரர் விகாஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து விகாஸ் கூறுகையில் ‘‘இது மிகப்பெரிய கவுரவம். இருந்தாலும் நான் இந்த விருதால் மகிழ்ச்சி அடையவில்லை. ஏனெனில் நான் ரியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல ஆசைப்பட்டேன். அதை உண்மையிலேயே தவற விட்டுவிட்டேன்’’ என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்