முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹாக்கி டெஸ்ட்: ஆஸ்திரேலியாவை 3-2 என வீழ்த்தி இந்தியா வெற்றி

செவ்வாய்க்கிழமை, 29 நவம்பர் 2016      விளையாட்டு
Image Unavailable

மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் ஹாக்கி தொடரின் முதல் போட்டியில் இந்தியா 3-2 என வெற்றி பெற்றது.

நான்கு நாடுகள் கலந்து கொண்ட ஹாக்கி தொடர் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெற்றது. இதில் இந்தியா வெண்கல பதக்கம் வென்றது. ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டம் வென்றது. அதன்பின் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட ஹாக்கி டெஸ்டில் இந்தியா மோதி வருகிறது. முதல் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் இந்தியா 3-2 என வெற்றி பெற்றது.

இந்திய அணியின் இளம் வீரராக ஆஃப்பன் யூசுப் முதல் பாதி நேரத்தில் இரண்டு கோல்கள் அடித்தார். அதன்பின் ஆஸ்திரேலியா இரண்டு கோல்கள் அடித்து சமன் பெற்றது. ஆனால் கடைசி நேரத்தில் இந்திய அணி கேப்டன் வி.ஆர். ரகுநாத் ஒரு கோல் அடிக்க இந்தியா 3-2 என வெற்றி பெற்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்