முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜப்பானில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு - பறவைகளை அழிக்க அரசு முடிவு

புதன்கிழமை, 30 நவம்பர் 2016      உலகம்
Image Unavailable

டோக்கியோ : ஜப்பானில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து பண்ணைகளில் வளர்க்கப்படும் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட பறவைகளை அழிக்க அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது.

ஜப்பான் நாட்டின் வடக்கு மற்றும் மத்திய மாவட்டங்களில் உள்ள கோழி மற்றும் வாத்துப் பண்ணைகளில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, சுகாதாரத் துறை அதிகாரிகள் அங்கு மேற்கொண்ட பரிசோதனையில், அந்தப் பண்ணைகளில் வளர்க்கப்படும் பறவைகளுக்கு H5 வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, நிகட்டா மாவட்ட பண்ணைகளில் உள்ள 3 லட்சத்து 20 ஆயிரம் கோழிகளையும், ஓமோரி  மாவட்ட பண்ணைகளில் உள்ள 16 ஆயிரத்து 500 வாத்துகளையும் அழிக்க முடிவு செய்யப்பட்டு, அதற்கான பணி தொடங்கியது. மேலும், இந்த மாவட்டங்களுக்கு உள்பட்ட பகுதிகளிலிருந்து, கோழி மற்றும் வாத்துகளை இதர இடங்களுக்குக் கொண்டு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.

பறவைக் காய்ச்சல் வேறு இடங்களுக்குப் பரவாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஜப்பானில், இரண்டு ஆண்டுகள் கழித்து பறவைக் காய்ச்சல் தொற்று இருப்பது தற்போதுதான் உறுதிசெய்யப்பட்டுள்ளது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago