முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஃபிடல் காஸ்ட்ரோ அஸ்திக்கு வரிசையில் நின்று மக்கள் அஞ்சலி - பல்வேறு நாட்டு தலைவர்களும் குவிந்தனர்

புதன்கிழமை, 30 நவம்பர் 2016      உலகம்
Image Unavailable

ஹவானா : மறைந்த பிடல் காஸ்ட்ரோவின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஜிம்பாப்வே அதிபர், பிரேசில் வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் ஸ்பானிஷ் அரசர் உள்ளிட்டோர் கியூபா வந்தடைந்தனர்.

கியூபா நாட்டின் மாபெரும் தலைவரும், முன்னாள் அதிபருமான ஃபிடல் காஸ்ட்ரோ, கடந்த வெள்ளிக்கிழமை காலமானார். இதையொட்டி, அங்கு தேசிய அளவிலான துக்கம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. வரும் 4-ம் தேதி இறுதி அஞ்சலி நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில், பங்கேற்பதற்காக, பல்வேறு நாட்டு தலைவர்களும் கியூபா தலைநகர் ஹவானா வந்தடைந்துள்ளனர். இந்தியா சார்பில் உள்துறை அமைச்சர்  ராஜ்நாத் சிங் தலைமையிலான பிரதிநிதிகள் குழு கியூபா சென்றுள்ளது.

இந்நிலையில், பிடல் காஸ்ட்ரோவின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஜிம்பாப்வே அதிபர் ராபர்ட் முகாபே, பிரேசில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜோஸ் செர்ரா, ஸ்பானிஷ் அரசர் ஜுவான் கார்லோஸ் உள்ளிட்டோர் ஹவானா வந்தடைந்தனர். மேலும் பல்வேறு நாடுகளின் தலைவர்களும், பிரதிநிதிகளும் கியூபாவுக்கு வந்தவண்ணம் உள்ளனர். ஹவானாவில் உள்ள புரட்சி சதுக்கத்தில் வைக்கப்பட்டுள்ள பிடல் காஸ்ட்ரோவின் அஸ்திக்கு, பல்லாயிரக்கணக்கான மக்கள் வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்