முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மே.வங்கத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் 3 ராணுவ அதிகாரிகள் பலி

புதன்கிழமை, 30 நவம்பர் 2016      இந்தியா
Image Unavailable

சுக்னா(மே.வ), மேற்கு வங்க மாநிலம் சுக்னாவில் நேற்று நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் அதில் பயணம் 3 ராணுவ அதிகாரிகள் பலியானார்கள்.  இந்த விபத்து ராணுவ வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பயங்கர விபத்து: மேற்கு வங்க மாநிலம் சுக்னாவில் நேற்று காலை11.45 மணிக்கு ராணுவ அதிகாரிகள் பயணம் செய்த ஹெலிகாப்டர் திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து  விபத்துக்குள்ளானது. அதில் இருந்த 3 அதிகாரிகளும்  விபத்தில் படுகாயம் அடைந்து உயிரிழந்தனர். விபத்தில் படுகாயம் அடைந்த ஒரு அதிகாரி மீட்கப்பட்டு மருத்துவனை சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டார் என கிழக்கு ராணுவ கமாண்ட் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். படுகாயம் அடைந்த  ஜீனியர் கமிஷன்ட் அதிகாரி(ஜே.சி.ஓ)  உடல் நிலை கவலைக்கிடமாகவே உள்ளது. அவர் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப்பிரிவில் வைக்கப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.   ராணுவ ஹெலிகாப்டர் வழக்கமான பயிற்சிக்கு சென்று பின்னர் தரையிறங்கியபோது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து பயங்கர விபத்துக்குள்ளானது.  விபத்தில்  மேஜர் சஞ்சீவ் லாத்தர், மேஜர் அரவிந்த் பாஸ்லா, லெப்டினன்ட் கர்னல் ரஞ்சித் குமார் ஆகியோர் பலியானார்கள்.

விபத்து குறித்து தகவலறிந்த மீட்புக்குழுவினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்றனர். அங்கு உயிருக்கு போராடிய அதிகாரியை மீட்ட மீட்புக்குழுவினர் அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் 5 இருக்கைகளை கொண்ட இந்த சீட்டா வகை ஹெலிக்காப்டர் ஆகும்.

அதிக உயரத்தில் : அது அதிக ஈர்ப்பு விசை உள்ள இடங்களிலும் அதிக உயரத்திலும் பறக்கக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டது என  ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் நிறுவனம் தெரிவித்தது. ஹெலிகாப்டர் திடீரென விபத்துக்குள்ளானது குறித்து அந்த ஹெலிகாப்டர் பறப்பற்கு உரிய தகுதியுடன் உள்ளதா? என கண்டறியவும், அதில் ஏதேனும் தொழில் நுட்பக் கோளாறு இருந்ததா? என்ற கண்டறியவும் உத்தரவிடப்பட்டுள்ளது.  ராணுவ ஹெலி காப்டர்கள்  அடிக்கடி விபத்துக்குள்ளாவது குறித்து கேள்வி எழுந்துள்ளது. விபத்துக்கு மனித தவறு காரணமா? வானிலையில்  மாற்றம் ஏற்பட்டு விபத்து ஏற்பட்டதா என்பது குறித்தும் அறிய உரிய விசாரணை நடத்த வேண்டும் என ராணுவ உயர் மட்டத்தில் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago