பெட்ரோல் விலை அதிகரிப்பு

புதன்கிழமை, 30 நவம்பர் 2016      வர்த்தகம்
Image Unavailable

புதுடெல்லி, பெட்ரோல் விலை லிட்டருக்கு 13 காசுகள் அதிகரித்தும், டீசல் விலை லிட்டருக்கு 12 காசு குறைத்தும் யை எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன. இந்த விலை மாற்றம் நேற்று நள்ளிரவு முதல் உடனடியாக அமலுக்கு வந்தது.

பெட்ரோல், டீசல் விலை மாற்றத்தை  நிர்ணயிக்கும் அதிகாரம் மத்திய அரசின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. எண்ணெய் விலை உயர்வை சர்வ தேசசந்தை நிலவரத்திற்கு ஏற்ப அரசு அடிக்கடி மாற்றாத நிலையால் பெரும் நஷ்டம் ஏற்படுகின்றன என எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து கூறின.

மத்திய அரசு முடிவு: இந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலையை  எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்தது. இதனால் சர்வதேச கச்சா எண்ணெய் விலை மாற்றத்திற்கு ஏற்ப இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மாற்றி வருகின்றன. 15 நாட்களுக்கு ஒரு முறை  இந்த விலை மாற்றம் அறிவிக்கப்படுகிறது.


அரசின் புதிய முடிவால் எண்ணெய் நிறுவனங்கள்  மாதத்திற்கு இரு முறை  பெட்ரோல், டீசல் விலையை அதிரடியாக மாற்றி வருவதால் அதன் விலை உயர்வு மக்களுக்கு உடனடியாக உணரப்படாத வகையில் அதிகரித்து வருகிறது. இதனால் சாதாரண , நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். இந்த விலை உயர்வுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிப்பதுடன் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றன.

7 முறை உயர்வு: இந்த நிலையில் நேற்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 13 காசுகள் உயர்த்தப்பட்டது, டீசல் விலை லிட்டருக்கு 12 காசுகள் குறைக்கப்பட்டது. இந்த விலை மாற்றம் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. பெட்ரோல் விலை கடந்த செப்டம்பர் முதல் இதுவரை 7 முறை உயர்த்தப்பட்டுள்ளது. நவம்பர் 15ம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.46, டீசல் விலை லிட்டருக்கு ரூ.1.53 குறைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. மற்ற தருணங்களில் மக்கள் பாதிக்கப்படும் வகையிலே விலை மாற்ற அதிகரிப்பு இருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்: