முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

யுவராஜ் சிங் பாலிவுட் நடிகையை மணந்தார் - கிரிக்கெட் பிரபலங்கள் பங்கேற்பு

புதன்கிழமை, 30 நவம்பர் 2016      விளையாட்டு
Image Unavailable

சண்டிகர் : இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ்சிங் மற்றும் பாலிவுட் நடிகை ஹசல் கீச் ஆகியோருக்கு நேற்று திருமணம் நடைப்பெற்றது. இதற்காக நேற்று முன்தினம் இரவு காக்டைல் பார்ட்டி நடந்தது. இதில் விராட் கோலி மற்றும் பெரும்பாலான இந்திய வீரர்கள் கலந்துக்கொண்டனர்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி வீரர் யுவராஜ்சிங். 2011 உலக கோப்பையை வெல்ல காரணமாக இருந்த இவருக்கும், இங்கிலாந்தை சேர்ந்த மாடல் அழகி ஹாசல் கீச்சுக்கும் இடையே திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது.நேற்று சீக்கிய முறைப்படி சண்டிகரில் யுவராஜ் சிங் திருமனம் நடைபெற்றது. அதன் பின் கோவாவில் டிசம்பர் 2ம் தேதி இந்து முறைப்படி திருமணம் செய்ய உள்ளார். அதே போல டிசம்பர் 5 மற்றும்  7ம் தேதி இரண்டு முறை திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மொகாலியில் நடந்த 3-வது டெஸ்ட் போட்டி நான்காவது நாளிலே இந்திய வெற்றிப்பெற்று முடித்தது. அதோடு இரவே யுவராஜ்சிங் திருமண நிகழ்ச்சியிலும் பங்கேற்றனர். நேற்று சண்டிகரில் நடைப்பெற்ற திருமண விழாவிற்கு இந்திய டெஸ்ட் கேப்டன் கோலி, முரளி விஜய், பார்த்தீவ் படேல், இசாந்த் சர்மா,ஆசிஸ் நெஹரா, முகமது கைப், முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் கபில் தேவ், பஞ்சாப் கிரிக்கெட் அசோசியேசன் அதிகாரிகள், கிரிக்கெட் வர்ணனையாளர்கள் பிமானி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கோலி உட்பட பலர் பாரம்பரிய உடைகளை அணிந்து யுவராஜ் திருமண விழாவில் கலந்து கொண்டனர்.

முன்னதாக யுவராஜ் சிங்கின் தந்தை திருமணத்தில் கலந்து கொள்ளப்போவதில்லை என்ற செய்தி வெளியானது. ஆனால் அதை பொய்யாக்கும் வகையில் யுவராஜ் சிங்கின் தந்தை யோக ராஜ் திருமணத்திற்கு வந்த விருந்தினரை வரவேற்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்