முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

‘நாடா’ புயல் அவசர உதவிக்கு கட்டணமில்லா தொலைபேசி எண் தமிழக அரசு அறிவிப்பு

வியாழக்கிழமை, 1 டிசம்பர் 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை, நாடா புயல் குறித்து அவசர தகவல்களை பெற கட்டணமில்லா தொலைபேசி எண்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.

நடா புயல் குறித்த தகவல்களை பெறவும், அவசர உதவி கோரவும் பொதுமக்கள் தொடர்பு கொள்ளும் விதமாக 1070, 1077 என்ற கட்டணமில்லா தொடர்பு எண்களை தமிழக அரசு அறிவுறித்தியுள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள நடா புயல் கடலூருக்கு அருகில் டிசம்பர் 2-–ல் கரையைக் கடக்கும் என்று கருதப்படுகிறது. இந்த புயலால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், நாகப்பட்டினம், விழுப்புரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று வியாழன், வெள்ளி ஆகிய இரண்டு நாள்களும் விடுமுறை அறிவித்து பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், அண்ணா பல்கலைக்கழகம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம், சட்டப் பல்கலைக்கழகமும் வியாழக்கிழமை (டிச.1) நடைபெறவிருந்த தேர்வுகளை ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. புயல் எச்சரிக்கையை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

உஷார் நிலையில் இருக்குமாறும், தாழ்வான பகுதியில் இருக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கவும் அறிவுரை அளிக்கவும் மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. இதையடுத்து அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வரும் மாவட்ட நிர்வாகம், நிவாரண முகாம்களுக்கு சென்று மக்கள் பாதுகாப்பாக இருக்கவும் அறிவுரை வழங்கி வருகிறது.

இந்நிலையில், ‘நாடா’ புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் வெள்ள பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் அவசர உதவிக்கு தொடர்பு கொள்ள தொலைபேசி, வாட்ஸ்அப் எண்கள், மின்னஞ்சல் முகவரிகள் வெளியிடப்பட்டுள்ளன. சென்னை மக்கள் அவசர உதவி பெற 24 மணிநேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறையை மாநகராட்சி நிர்வாகம் அமைத்துள்ளது.

044–25619206, 25619511 ஆகிய தொலைபேசி எண்களில் உதவிக்கு அழைக்கலாம் என்று மாநகராட்சியின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 9445477207, 9445477203 ஆகிய வாட்ஸ்அப் எண்களிலும் பாதிப்புகள் குறித்து தகவல் தெரிவிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், [email protected], [email protected], [email protected], [email protected], gccdm5@chennaicorporatio, gov.in ஆகிய மின்னஞ்சல் முகவரிகள் வழியாகவும் இடையூறுகள் குறித்த தகவல்களை அளிக்கலாம். இதுபோன்று, கடலூர், புதுச்சேரி நாகப்பட்டினத்தைச் சேர்ந்த பொதுமக்கள் 1070, 1077 என்ற கட்டணமில்லா எண்ணில் தங்களுக்கு தேவையான உதவிகளை கோரலாம். திருவள்ளூரில் 1070, 1077 என்ற எண்ணிலும் 044–27664177 என்ற எண்ணிலும் 24 மணி நேரமும் அவசர உதவிக்கு தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago