முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுங்க கட்டணம் ரத்தை 31-ந்தேதி வரை நீட்டிக்க வேண்டும் - வாசன்

வியாழக்கிழமை, 1 டிசம்பர் 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை, சுங்கக் கட்டணத்தை வரும் 31-ம் தேதி (31.12.2016) வரை வசூல் செய்ய வேண்டாம் என்ற அறிவிப்பை மத்திய அரசு வெளியிட வேண்டும் என ஜி.கே. வாசன் அறிக்கை விடுத்துள்ளார்.

த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்தியாவில் கருப்பு பணம் மீட்பு, கள்ள நோட்டு ஒழிப்பு போன்றவற்றிற்காக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு 22 நாட்கள் ஆன பிறகும் கூட பணத் தட்டுப்பாடு இன்னும் குறையவில்லை.2000 ஆயிரம் ரூபாய் நோட்டுகளுக்கு சில்லறைக் கொடுப்பதற்கு தயாராக இல்லை. இதன் காரணமாக 50 மற்றும் 100 ரூபாய் நோட்டுகள் அதிக அளவில் புழக்கத்திற்கு வரவில்லை. இத்தகைய ஒரு கஷ்டமான சூழலிலே டிசம்பர் 3 முதல் சுங்கக் கட்டண வரியை மீண்டும் செலுத்த வேண்டும் என்று மத்திய அரசு அறிவித் திருப்பது ஏற்புடையதல்ல.எனவே உடனடியாக மத்திய அரசு சுங்கக் கட்ட ணத்தை வரும் 31-ம் தேதி (31.12.2016) வரை வசூல் செய்ய வேண்டாம் என்ற அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று த.மா.கா. சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்