முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டிசம்பர் 17-ல் கைத்தறி நெசவு விழிப்புணர்வு சுற்றுலா: கோ-ஆப்டெக்ஸ் ஏற்பாடு

வியாழக்கிழமை, 1 டிசம்பர் 2016      வர்த்தகம்
Image Unavailable

சென்னை, தமிழர்களின் உன்னத மரபு சார்ந்த கைத்தறி நெசவுத் தொழிலை இன்றைய இளைய தலைமுறையினர் அறிந்துகொள்ள வேண்டும்; அந்த தொழில்நுட்ப வல்லுநர்களின் திறமை அங்கீகரிக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழகம் முழுவதும் உள்ள கைத்தறி உற்பத்தி செய்யும் இடங்களுக்கு இளைய தலைமுறை வாடிக்கையாளர்களை விழிப்புணர்வு சுற்றுலாவாக அழைத்துச் செல்ல கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

முதல்கட்டமாக 20 வாடிக்கையாளர்கள் உலகப் புகழ் பெற்ற காஞ்சிபுரம் பட்டுச் சேலைகளை உற்பத்தி செய்யும் நெசவாளர்களின் இல்லங்களுக்கே கடந்த நவம்பர் 26-ம் தேதி அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்கள் காஞ்சிபுரம் பட்டுச் சேலைகள் உற்பத்தி செய்யப்படும் முறையை தெரிந்துகொண்டனர்.அதைத் தொடர்ந்து மதுரை, சின்னாளப்பட்டி, திண்டுக்கல் பகுதிகளில் உற்பத்தியாகும் கோடம்பாக்கம் சேலைகள், தேவேந்திரா சேலைகள், திண்டுக்கல் பருத்தி சேலைகள், சுங்கடி சேலைகள் ஆகியவற்றை உற்பத்தி செய்கின்ற நெசவாளர் பகுதிக்கு வாடிக்கையாளர்களை அழைத்துச் செல்ல உள்ளது. வரும் டிசம்பர் 17-ம் தேதி சுற்றுலா அழைத்துச் செல்லப்பட உள்ளது.

இந்த விழிப்புணர்வு சுற்றுலாவில் பங்கேற்க விரும்பும் வாடிக்கையாளர்கள் கைத்தறி குழும உதவி பொது மேலாளர் எஸ்.பழனிச்சாமியின் 9444953739 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் தங்களில் பெயர்களை டிசம்பர் 10-ம் தேதிக்குள் பதிவு செய்துகொள்ள வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் இதற்கான கட்டணமாக ரூ.750-ஐ வரையோலையாக (DD in the name of T.N.H.W.C.S. Ltd.,) செலுத்த வேண்டும். நபர்களை தேர்வு செய்யும் முழு உரிமை கோ-ஆப்டெக்ஸுக்கு மட்டுமே உண்டு. வாடிக்கையாளர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்