முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கச்சத்தீவில் உள்ள புனித அந்தோனியார் கோவில் புதிய கட்டிட திறப்பு விழாவில் பங்கேற்க தமிழக மீனவர்களை அனுமதிக்க வேண்டும்

வியாழக்கிழமை, 1 டிசம்பர் 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை : கச்சத்தீவு புனித அந்தோணியார் கோவில் புதிய கட்டிட விழாவுக்கு தமிழக மீனவர்கள் செல்வதற்கு எந்தவித ஆட்சேபமும் ஏற்படாமலும், உரிய பாதுகாப்பும் உதவிகளும் மேற்கொள்ளப்பட நடவடிக்கை எடுங்கள் என வெளியுறவுத்துறை செயலாளர் ஜெய்சங்கருக்கு தமிழக தலைமைச்செயலாளர் ராம மோகனராவ் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
தமிழக தலைமைச்செயலாளர் ராம மோகன ராவ் வெளியுறவுத்துறை செயலாளர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கருக்கு நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது,

தேவாலய புதிய கட்டிட விழா 

தமிழகத்தில் உள்ள ராமநாதபுரம் மாவட்ட கலெக்டருக்கு ராமேஸ்வரம் வேர்கோடு செயின்ட் ஜோசப் கிறிஸ்துவ தேவாலயத்தின் பாதிரியர் சகாயராஜ் ஒரு மனு அளித்துள்ளார். அந்த மனுவில் கச்சதீவில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயத்தின் புதிய கட்டிட புனிதாபிஷேக விழா வருகிற 7-12-16 அன்று நடைபெறுகிறது. அந்த விழாவிற்கு தமிழகத்தில் இருந்து 100 பக்தர்கள் கலந்து கொள்ள அதிக விருப்பம் கொண்டவர்களாக உள்ளனர். அந்த விழாவில்  கலந்து கொள்ள அத்தியாவசிய ஏற்பாடுகளை செய்து தருமாறு அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலயம் தமிழக கடலோர மாவட்ட மீன் சமூகத்தினரின் கலச்சாரம் மற்றும் மத பாரம்பரியத்துடன் தொடர்புடையதாகும். கச்சத்தீவில் ஆண்டு தோறும் புனித அந்தோணியார் தேவாலயத்தில் நடக்கும்  விழாவிற்கு தமிழக மீனவ சமூகத்தை சேர்ந்த பக்தர்கள் அதிக அளவில் செல்கிறார்கள். அவர்கள் பாதுகாப்பாக பயணம் செய்யவும், அவர்களுக்கான  பாதுகாப்பையும் இந்திய அரசின் ஆலோசனையுடன் தமிழக அரசு வழங்கியுள்ளது.

மீனவர்கள் வேண்டுகோள்

கச்சத்தீவு தேவாலய கட்டிடத்தினை இடித்து கட்டுவதற்கான கருத்துரு வந்தபோது இந்தியாவும், இலங்கையும் கூட்டாக இணைந்து அந்த ஆலய புதிய கட்டிடத்தை கட்ட வேண்டும் என தமிழக கடலோர மாவட்ட மீனவர்கள் சார்பில்  கோரப்பட்டது. இரு நாடுகளின் மீனவர்களின் கூட்டு பாரம்பரியத்தை கருத்தில் கொண்டு இவ்வாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

முதல்வர் கடிதம்

தமிழக முதல்வர் கடந்த 14-5-2016 அன்று பிரமருக்கு அனுப்பிய கடிதத்தில் கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் தேவாலய கட்டிடத்தை இடித்து புதிதாக கட்டும் முடிவை இலங்கை அரசு தன்னிச்சையாக எடுத்ததற்கு தமிழக மீனவர்கள் கவலை அடைந்துள்ளதை குறிப்பிட்டு இருந்தார். கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய கட்டிடத்தை இடித்து புதிதாக கட்டும் முடிவை தமிழக மீனவர்கள் ஆலோசனை இல்லாமல்  இலங்கை அரசு தன்னிச்சையாக முடிவெடுத்துள்ளது. கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயம்  தமிழக மீனவர்களின் கலாச்சார பாரம்பரியத்தை சார்ந்தது ஆகும் என்பதையும் முதல்வர் தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். கச்சத்தீவை மீட்டெடுக்கவும், தமிழக மீனவர்களின் உரிமைகளை மீட்டெடுக்கவும் தமிழக முதல்வர் இந்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

உரிய நடவடிக்கை தேவை

இந்த பின்னணியில், கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் தேவாலய புதிய கட்டிட விழா தமிழக மீனவர்களின் மத மற்றும் கலச்சாரத்துடன் தொடர்புள்ளது. கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலய விழாக்களில்  பங்கேற்பது அவர்களது கூட்டு  உரிமையாகவும் உள்ளது. எனவே கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலய புதிய கட்டிட விழா நடைபெறும் 7-12-2016 நடைபெறும் நாளில் தமிழக மீனவர்கள் பங்கேற்புக்கு எந்த வித ஆட்சேபமும் வராமல் இருக்கவும், கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் தேவாயலய புதிய கட்டிட விழாவுக்கு செல்லும் தமிழக பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பும், உதவியும் அளிக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும்.

இவ்வாறு வெளியுறவுத்துறை செயலாளர் ஜெய்சங்கருக்கு தமிழக தலைமைச்செயலாளர் ராம மோகன ராவ் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago