முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் அனைத்து ஏ.டி.எம்.களும் ஒரு வாரத்தில் சீராகும்

வெள்ளிக்கிழமை, 2 டிசம்பர் 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை, சென்னையில் அடுத்த வாரம் அனைத்து ஏ.டி.எம்.களும் தயாராகி விடும். அதன்பிறகு ஏ.டி.எம்.களில் ரூ.500 நோட்டுகள் தாராளமாக கிடைக்கும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

முழு அளவில் செயல்படவில்லை

ரூ.1000, 500 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை தொடர்ந்து ரூ.2 ஆயிரம், ரூ.500 புதிய கரன்சிகளை மத்திய அரசு வெளியிட்டது. ஆனால் பழைய ரூ.1000, ரூ.500 மற்றும் ரூ.100 நோட்டுக்களை மட்டுமே வழங்கும் வகையில் ஏ.டி.எம்.க்கள் வடிவமைக்கப்பட்டு இருப்பதால் ஏ.டி.எம்.க்கள் மூலம் பணம் எடுப்பதும் தடைபட்டது. ஏ.டி.எம்.க்கள் சீரமைக்கப்பட்டு பணம் வழங்க ஏற்பாடு செய்திருந்தும் முழு அளவில் ஏ.டி.எம்.கள் செயல்படவில்லை. ஒருசில ஏ.டி.எம்.கள் இன்னும் மூடியே கிடக்கின்றன.

இதுபற்றி அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

நிலமை சீரடைந்து வருகிறது. புதிய 500 ரூபாய் நோட்டு 100 ரூபாய் நோட்டை விட சிறியதாக இருப்பதால் அதற்கேற்ப ஏ.டி.எம்.களை தயார் செய்யும் பணியில் என்ஜினீயர்கள் ஈடுபட்டுள்ளார்கள். சென்னையில் அடுத்த வாரம் அனைத்து ஏ.டி.எம்.களும் தயாராகி விடும். அதன்பிறகு ஏ.டி.எம்.களில் ரூ.500 நோட்டுகள் தாராளமாக கிடைக்கும். கமிஷனுக்கு பண பரிமாற்றம் நடப்பதாக புகார் எங்களுக்கும் வந்துள்ளது. இதில் பல புரோக்கர்கள் ஈடுபட்டுள்ளார்கள். சில வியாபாரிகள் சிறு சிறு தொழில் நிறுவனங்கள் வருமானத்தை நஷ்ட கணக்கு காட்டி இந்த கமிஷனுக்கு பணம் மாற்றும் வேலையில் புரோக்கர்களுடன் கைகோர்த்து செயல்படுகிறார்கள்.

ரகசிய கண்காணிப்பு
கணக்கில் காட்டாத பணம் வைத்திருப்பவர்கள் கமிஷனுக்கு பணத்தை மாற்றி விட்டோம். இனி பிரச்சனை இல்லை என்று நினைத்தால் ஏமாந்து போவார்கள். பண பரிமாற்றத்தில் ஈடுபடுபவர்கள் பணங்கள் செல்லும் இடங்கள் ரகசியமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. அந்த பணங்களை பறிமுதல் செய்வதற்கான வியூகமும் வகுக்கப்பட்டுள்ளது. இப்போது பணம் வழங்கும் பணியில் தீவிரமாக இருப்பதால் அதிரடி நடவடிக்கையை தீவிரப்படுத்தாமல் இருக்கிறோம். அந்த பணிகள் விரைவில் தொடங்கும். ஒருசில வங்கி ஊழியர்கள் முறைகேடுகளில் ஈடுபட்டாலும் 95 சதவீத ஊழியர்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருவதால் பிரச்சனைகள் தவிர்க்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்