முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ஜனதா நிர்வாகிகள் வருமானமும் வெளிப்படையாக இருக்க வேண்டும்: தமிழிசை கருத்து

வெள்ளிக்கிழமை, 2 டிசம்பர் 2016      அரசியல்
Image Unavailable

சென்னை, மக்கள் பிரதிநிதிகள் மட்டுமில்லாமல் கட்சி நிர்வாகிகளும், வருமானவரி பராமரிப்பில் வெளிப்படைத் தன்மையுடன் இருக்க வேண்டும் என்று தமிழிசை கூறினார்.

வங்கி கணக்கு பரிவர்த்தனை

பா.ஜனதா எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் நவம்பர் 8-ம் தேதி முதல் டிசம்பர் 31-ம் தேதி வரையான வங்கி கணக்கு பரிவர்த்தனைகளை கட்சி மேலிடத்துக்கு தெரிவிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். இதேபோல் கட்சி நிர்வாகிகளுக்கும் உத்தரவிடப்படுமா என்ற கேள்விக்கு தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:-

மக்கள் பிரதிநிதிகள் மட்டுமில்லாமல் கட்சி நிர்வாகிகளும், வருமானவரி பராமரிப்பில் வெளிப்படைத் தன்மையுடன் இருக்க வேண்டும் என்பதுதான் பிரதமர் மோடியின் எதிர்பார்ப்பும், கட்சியின் நிலைப்பாடும். கட்சி மேலிடத்தின் அறிவிப்பு இல்லா விட்டாலும் மாற்று வழிகளிலும், வரம் புக்கு மீறியும் சொத்துக்கள் சேர்ப்பது நடவடிக்கைக்கு உரியது என்பது எல்லோருக்கும் தெரியும். வெளிப் படையான நிர்வாகத்தைத் தான் மோடி விரும்புகிறார். யார் மீதும் சந்தேகப்படும்படி புகார்கள் வந்தால் பாரபட்சம் இல்லாமல் கட்சி விசாரிக்கும். அதற்கு ஒரு உதாரணம்தான் சேலத்தில் முறைகேடாக பணம் வைத்திருந்த கட்சி நிர்வாகி அருண்குமார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை.

சுற்றுப்பயணம்

ஜெர்மனியில் ஆளும் கட்சியின் 29-வது மாநாட்டில் கலந்து கொள்ள ஒரு குழுவை அனுப்பும்படி இந்தியாவின் ஆளுங்கட்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்பேரில் எனது தலைமையில் 5 பேர் கொண்ட குழுவை கட்சி மேலிடம் தேர்வு செய்துள்ளது. நாங்கள் வருகிற 4-ம் தேதி ஜெர்மனி புறப்பட்டு செல்கிறோம். இந்த சுற்றுப்பயணம் அரசியல் சார்ந்த சுற்றுப்பயணமாக அமையும். சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு 10-ம் தேதி நாடு திரும்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்