முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வட மாநிலங்களில் தொடரும் பனிமூட்டம் ரயில் மற்றும் விமான சேவை பாதிப்பு

வெள்ளிக்கிழமை, 2 டிசம்பர் 2016      இந்தியா
Image Unavailable

 புதுடெல்லி  - டெல்லியில் தொடரும் பனிமூட்டம் காரணமாக விமானம் மற்றும் ரயில்சேவைகள்  பாதிக்கப்பட்டுள்ளன. உத்தரப்பிரதேசத்தில் அடர்ந்த பனிமூட்டம் காரணமாக நிகழ்ந்த சாலை விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
 கடும் பனிப்பொழிவு :

டெல்லி, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக பனிப்பொழிவு மிகக்கடுமையாக இருந்து வருகிறது. இந்நிலையில்  நேற்றும் டெல்லியில் கடுமையான பனிப்பொழிவு காணப்பட்டது. சாலையில் வாகனங்கள் மிக குறைந்த வேகத்தில் இயக்கப்படுகின்றன. விடிந்து வெகுநேரம் ஆன பின்பும், போதிய வெளிச்சம் கிடைக்காததால், வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே இயக்கப்பட்டன. டெல்லி ஆர்.கே.புரம் மற்றும் விமான நிலையப் பகுதிகளில் கடும் பனிமூட்டம் நிலவுகிறது.

விமான ங்கள்  தாமதம் : டெல்லியிலிருந்து சென்னை வரவேண்டிய 3 விமானங்கள் 2 மணிநேரம் தாமதமாக வருவதுடன், ஒரு தனியார் விமானத்தின் சேவையும் ரத்து செய்யப்பட்டன. டெல்லியிலிருந்து புறப்பட வேண்டிய 12 ரயில்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 70 ரயில்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன. இதேபோல், உத்தரப்பிரதேச மாநில மாநிலத்திலும் கடும் பனிமூட்டம் நிலவுகிறது.

அலகாபாத், லக்னோ உள்ளிட்ட இடங்களில் பனிமூட்டம் காரணமாக பொதுமக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. விமானங்களின் வருகை மற்றும் புறப்பாடு தாமதமாகியுள்ளது. அலகாபாத் நெடுஞ்சாலையில் வாகனம் மோதி 3 பேர் உயிரிழந்தனர். 6 பேர் படுகாயமடைந்தனர். மேலும், பஞ்சாப் மாநிலத்திலும் கடும் பனிமூட்டம் நிலவுகிறது. அம்ரித்சர் உள்ளிட்ட இடங்களில் நிலவும் பனிமூட்டத்தால் ரயில் மற்றும் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago