முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காரைக்கால் அருகே நாடா புயல் கரையை கடந்தது : தமிழகத்தில் பரவலாக மழை

வெள்ளிக்கிழமை, 2 டிசம்பர் 2016      தமிழகம்
Image Unavailable

 திருச்சியில்  மழை :திருச்சி மாவட்டத்தில் 2-வது நாளாக  நேற்றும் மழை நீடித்தது. பீமநகர், திருவானைக்காவல், கண்டோன்மென்ட், புதுக்கோட்டை சாலை, மணிகண்டம், மணப்பாறை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி, ஆலங்குடி, திருமயம், கந்தர்வகோட்டை, விராலிமலை ஆகிய பகுதிகளிலும் மழை பெய்தது. புயல் எச்சரிக்கை காரணமாக, ஜெகதாப்பட்டினம், கோட்டைபட்டினம் மீனவர்கள் மற்றும் கடற்கரை பகுதி மீனவர்கள் உட்பட 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை. 

பாலச்சந்திரன் பேட்டி :இதனிடையே, சென்னையில்  நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வானிலை ஆய்வு மைய இயக்குநர்   பாலச்சந்திரன், நாடா புயல் காரைக்காலுக்கு தெற்கே 20 கிலோ மீட்டர் தொலைவில்  நேற்று அதிகாலை 4.30 மணியிலிருந்து 5 மணிக்குள் கரையை கடந்ததாகத் தெரிவித்தார். அப்போது மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியதாகவும், இப்புயல் தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருப்பெற்று நாகப்பட்டினத்திற்கு மேற்கே சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டிருப்பதாகவும் கூறினார். அடுத்த 12 மணிநேரத்தில் இது காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவிழக்கும் என்றும் பாலச்சந்திரன் குறிப்பிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago