முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிறிசேனாவுடன் அமெரிக்க புதிய துணை அதிபர் தொலைப்பேசியில் உரையாடல்

வெள்ளிக்கிழமை, 2 டிசம்பர் 2016      உலகம்
Image Unavailable

நியுயார்க்   - அமெரிக்க துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மைக் பென்ஸ் இலங்கை அதிபர் சிறிசேனாவை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.  இது குறித்து இலங்கை அரசின் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியதாவது, "அமெரிக்க துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மைக் பென்ஸ் வியாழக்கிழமை மாலை இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனாவை தொலைப்பேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசினார். இந்த உரையாடலில் இலங்கை அதிபர் சிறிசேனாவை அமெரிக்காவுக்கு வரும்படி மைக் பென்ஸ் அழைப்பு விடுத்தார்.

அதிபர்கள் உரையாடல் :மேலும் இந்த உரையாடலில் அமெரிக்கா - இலங்கை உறவை வலுப்படுத்துவது குறித்த ஆலோசனையில் இரு நாட்டுத் தலைவர்களும் ஈடுபட்டனர்" என்று கூறப்பட்டுள்ளது.  முன்னதாக அரசியல் பேரணி ஒன்றில் பங்கேற்ற இலங்கை அதிபர் சிறிசேனா, இலங்கையின் மீது ஐநா வலியுறுத்தி வரும் போர்க்குற்ற விசரணையைக் கைவிடுமாறு கடிதம் ஒன்றை அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ட்ரம்ப்புக்கு எழுத திட்டமிட்டிருந்ததாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்