முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய அமைச்சர்களிடம் பெருமளவில் ரொக்கம் பட்டியலில் அருண்ஜெட்லிக்கு முதலிடம்

வெள்ளிக்கிழமை, 2 டிசம்பர் 2016      இந்தியா
Image Unavailable

 புதுடெல்லி  - 2016 ம்  வருடம் மார்ச்  மாதம் 31ம் தேதி  கணக்கின்படி மத்திய அமைச்சர்கள் கையில் வைத்துள்ள ரொக்கம் குறித்த விவரம் அடங்கிய பட்டியல் கிடைத்துள்ளது. மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி இந்தப் பட்டியலில் முதலிடம் வகிக்கிறார். அவரிடம் ரூ.65 லட்சம் ரொக்கம் உள்ளது. ஒருபுறம் சாமானிய மக்கள் பணமின்றி தத்தளித்து வருகின்றனர், மறுபுறம் கிராமவாசிகளிடம் சென்று பிரதமரும், அருண் ஜேட்லியும் இ-வேலட், ஆன் லைன் வர்த்தகம், ரொக்கமற்ற சமுதாயத்தை நோக்கி முன்னேறுவோம் என்று அறைகூவல் விடும் நிலையில், அருண் ஜேட்லி உட்பட அமைச்சர்கள் கையில் பெரிய அளவில் ரொக்கமுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

 ரொக்க பணம் எவ்வளவு : தற்போது  பாஜக அமைச்சரவையில் பதவியில் இருக்கும் 76 அமைச்சர்களில் 40 பேர்தான் தங்களிடம் உள்ள ரொக்கப்பணம் எவ்வளவு என்பதை வெளியிட்டுள்ளனர். ரூ.500, ரூ.1000 நடவடிக்கையினால் நாட்டில் மக்கள் 22 நாட்களாக வங்கிக்கு நடையாக நடந்தும், நீண்ட வரிசையில் நின்றும் சோர்ந்ததுதான் மிச்சம்; கைக்கு பணம் கிடைப்பதில்லை. இந்த வரிசைகளில் தொழிலதிபர்களோ, கறுப்புப் பண முதலைகளோ, அமைச்சர்களோ, அரசியல்வாதிகளோ நிற்கவில்லை, இந்நிலையில் மார்ச் 31, 2016 கணக்கின்படி அமைச்சர்கள் கையில் வைத்துள்ள ரொக்க விவரம் கிடைத்துள்ளது.

 ஜெட்லி முதலிடம்:ரூ.500, ரூ.1000 நடவடிக்கை குறித்து நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அறிக்கைகளை வெளியிட்டு வரும் நிதியமைச்சர் அருண் ஜேட்லி இந்தப் பட்டியலில் முதலிடம் வகிக்கிறார். அவரிடம் ரூ.65 லட்சம் ரொக்கம் உள்ளது. மத்திய இணை அமைச்சர் ஸ்ரீபத் எசோ நாயக் (சுயேச்சை) ரூ.22 லட்சம் ரொக்கமும், மத்திய இணை அமைச்சர் ஹன்ஸ்ராஜ் ஆஹிர் ரூ.10 லட்சத்துக்கு அதிகமாகவும் வைத்திருக்க, பிரதமர் மோடி தன்னிடம் ரூ.89,700 ரொக்கம் இருப்பதாக அறிவித்துள்ளார்.
23 அமைச்சர்கள் தங்களிடம் ரூ.2 லட்சத்துக்குக் குறைவாக ரொக்கமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். 15 அமைச்சர்களிடம் 2.5 லட்சத்துக்கு மேல் ரொக்கம் உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்