முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

'மேற்கு வங்கத்தில் ராணுவப் புரட்சியா ?' மம்தா ஆவேசத்தால் பார்லியில் சலசலப்பு

வெள்ளிக்கிழமை, 2 டிசம்பர் 2016      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி    - மேற்கு வங்கத்தின் பல பகுதிகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் ராணுவத்தினர் ஆங்காங்கே வலம் வருவதைச் சுட்டிக் காட்டிய அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, "இது ராணுவப் புரட்சியா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், ராணுவத்தினர் அவ்வாறு வலம் வருவதை எதிர்த்துப் போராடும் விதமாக, மேற்கு வங்க தலைமைச் செயலகத்திலேயே அவர் தங்கியதும் கவனத்தை ஈர்த்துள்ளது.  இந்த விவகாரம்  நேற்று  நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிரொலித்ததால் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. 

 பல மாவட்டங்களில் ராணுவத்தினர்:மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்றிரவு செய்தியாளர்களிடம் பேசும்போது, "முர்ஷிதாபாத், ஜல்பாய்குரி, டார்ஜிலிங், பர்த்வான், ஹவுரா, ஹூக்ளி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் ராணுவத்தினர் காணப்படுகின்றனர். மாநில அரசுக்கு எந்த தகவலையும் முன்கூட்டியே அளிக்காமல் இவ்வாறு நடந்துகொள்வதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. இது ராணுவப் புரட்சியா? இது தொடர்பாக அரசியல் கட்சிகளிடமும் ஆலோசிக்க இருக்கிறோம்" என்றார்

மம்தா. மம்தா பானர்ஜி ஆவேசமாக பேசிய நிலையில், தலைமைச் செயலகத்துக்கு அருகில் இருந்த சுங்கச்சாவடியில் இருந்து ராணுவத்தினர் புறப்பட்டுவிட்டனர்.  

 கடும் அமளி:இந்த நிலையில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும்  நேற்று கூடியதும், திரிணாமூல் காங்கிரஸ் உறுப்பினர்கள் இப்பிரச்சினையை எழுப்பி கடும் அமளியில் ஈடுபட்டனர். மத்திய அரசுக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோஷமிட்டனர். இதன் தொடர்ச்சியாக, மக்களவையில் விளக்கம் அளித்த பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர், "மேற்கு வங்கம், வடகிழக்கு மாநிலங்களில் ராணுவத்தினர் பணியில் ஈடுபட்டிருப்பது வழக்கமான ஒன்றுதான்.

தேவையற்ற சர்ச்சையில் ராணுவத்தை இழுப்பது துரதிர்ஷ்டவசமானது. உண்மை நிலையை உணராமல் அரசியல் ரீதியில் இதைப் பார்க்கக் கூடாது" என்றார். இதனிடையே, "சுங்கச் சாவடிகளில் சரக்கு ஏற்றிச் செல்லும் வாகனங்கள் குறித்த விவரங்களைத் திரட்டுவது என்பது ராணுவம் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை பரிசோதிக்கும் வழக்கமான நடவடிக்கைதான். மேற்கு வங்க காவல் துறையின் ஒத்துழைப்புடன் தான் இதைச் செய்கிறோம்" என்று ராணுவ செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்