முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூபாய் நோட்டு நடவடிக்கையை எதிர்ப்பதால் குறிவைக்கப்படும் மேற்கு வங்கம்: மத்திய அரசு மீது கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

வெள்ளிக்கிழமை, 2 டிசம்பர் 2016      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி  -  ரூபாய்  நோட்டு ஒழிப்பு  நடவடிக்கையை மம்தா பானர்ஜி துணிச்சலாக எதிர்ப்பதால், மேற்கு வங்கத்தை மத்திய அரசு குறிவைக்கிறது' என்று டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டினார்.  இது தொடர்பாக அவர்   தன் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், "பண நீக்க மதிப்பு நடவடிக்கையை மம்தா பானர்ஜி துணிச்சலாக எதிர்த்துப் பேசுவதால் மேற்கு வங்க மாநிலம் குறிவைக்கப்படுகிறது. மேற்கு வங்க முதல்வர் தொடர்ந்து போராட வேண்டும். ஒட்டுமொத்த நாடே அவருடன் இருக்கிறது" என்று கெஜ்ரிவால் ட்வீட் செய்திருக்கிறார்.

இது ராணுவப் புரட்சியா?:முன்னதாக, மேற்கு வங்கத்தின் பல பகுதிகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் ராணுவத்தினர் ஆங்காங்கே வலம் வருவதைச் சுட்டிக் காட்டிய அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, "இது ராணுவப் புரட்சியா?" என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
மேலும், ராணுவத்தினர் விலக்கிக் கொள்ளப்படும் வரை தமது போராட்டம் தொடரும் என, மேற்கு வங்க தலைமைச் செயலகத்திலேயே அவர் தங்கியதும் கவனத்தை ர்த்தது.

இந்த விவகாரம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிரொலித்ததால் பெரும் சலசலப்பு ஏற்பட்ட நிலையில், ராணுவம் தன் வழக்கமான பணியில் ஈடுபட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர் விளக்கம் அளித்தது  குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்