முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரொக்கப் பண புழக்கம் இனி முன்புபோல் இருக்காது : அருண்ஜெட்லி சொல்கிறார்

வெள்ளிக்கிழமை, 2 டிசம்பர் 2016      இந்தியா
Image Unavailable

 புதுடெல்லி  -   முன்னர் இருந்ததுபோல் இனி நாட்டில் ரொக்கப் பணப் புழக்கம் அதிகளவில் இருக்காது என மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.  ரூ.500, 1000 செல்லாது என கடந்த மாதம் 8-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். மத்திய அரசின் இந்த  நடவடிக்கை பல்வேறு விமர்சனங்களுக்கும் உள்ளான நிலையில், கறுப்புப் பண ஒழிப் பைத்  தாண்டியும் ரொக்கப்பணமில்லா பரிவர்த்தனையை நோக்கி முன்னேறவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தற்போது விளக்கங்கள் கொடுத்து வருகிறது.

ரொக்கப் பண புழக்கம் குறையும்: இந்நிலையில், "நவம்பர் 8-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது நடவடிக்கையால், அந்த நோட்டுகளுக்கு பதிலாக புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

ஆனால், ரொக்கப் பண புழக்கம் இனி நவம்பர் 8-ம் தேதிக்கு முன்பு இருந்ததுபோல் இருக்காது. அதேவேளையில் வர்த்தகத்தில் எவ்வித பாதிப்பும் இருக்காது. மத்திய அரசின் நடவடிக்கையால் வர்த்தகம் வளரும், ரொக்கப் பண புழக்கம் குறையும்" என்றார் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி . தற்போது நிலவிவரும் பணத் தட்டுப்பாடு வரும் 31-ம் தேதிக்குள் சீராகிவிடும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்