முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குத்துச்சண்டை ஜாம்பவான் முகம்மது அலியின் கையுறை இன்று ஏலம் விடப்படுகிறது

வெள்ளிக்கிழமை, 2 டிசம்பர் 2016      விளையாட்டு
Image Unavailable

நியூயார்க்  - உலகப்புகழ் பெற்ற குத்துச்சண்டை வீரர் முகம்மது அலி பயன்படுத்திய கையுறை ஏலத்துக்கு வந்துள்ளது. ஜூலியன்ஸ் ஏல நிறுவனம் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் ஜூலியன்ஸ் என்ற பிரபல ஏல நிறுவனம் உள்ளது. மறைந்த மைக்கேல் ஜாக்சன் உள்ளிட்ட உலகப் பிரபலங்கள் முன்னர் பயன்படுத்திய பொருட்களை ஏலம் விடுவதில் பிரசித்திபெற்ற இந்நிறுவனம் தற்போது குத்துச்சண்டை வீரர் முகம்மது அலி பயன்படுத்திய கையுறையை ஏலத்தில் முன்வைத்துள்ளது. விளையாட்டு துறைசார்ந்த பல பிரபலங்கள் பயன்படுத்திய சுமார் 500 நினைவுப் பொருட்களை ஏலம்விடும் உரிமையை பெற்றுள்ளது. ஜூலியன்ஸ்

ஏல நிறுவனம்.முகம்மது அலி கையுறை ஏலம்
இந்த நிறுவனம் இன்று அவற்றை ஏலத்தில் விட தீர்மானித்துள்ளது. இவற்றில், மறைந்த முகம்மது அலி பயன்படுத்திய கையுறை மட்டும் சுமார் 60 ஆயிரம் டாலர்கள் வரை விலைபோகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  நியூயார்க் அருகேயுள்ள மாடிசன் நகரில் அமைந்துள்ள மாடிசன் ஸ்கொயர் விளையாட்டரங்கத்தில் கடந்த 1970-ம் ஆண்டு இந்த கையுறையை அணிந்துதான் ஆஸ்கர் பொனாவேனா என்ற குத்துச்சண்டை வீரரை முகம்மது அலி வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. 1974-ம் ஆண்டு ‘ரம்புல் இன் தி ஜங்குல்’ என்ற குத்துச்சண்டையில் தன்னுடன் மோதிய ஜார்ஜ் போர்மேன் என்பவரை ‘நாக்அவுட்’ செய்து வீழ்த்திபோது அவர் பயன்படுத்திய தாடை காப்பானும் இந்த ஏலத்தில் இடம்பெற்றுள்ளது.

சுருட்டுகள் ஏலம்
இதேபோல், கடந்த 1998-ம் ஆண்டு மனிதநேய நல்லெண்ணப் பயணமாக முகம்மது அலி கியூபா நாட்டுக்கு சென்றிருந்தபோது சுருட்டுப்பிரியரான அந்நாள் கியூபா அதிபர் (சமீபத்தில் மரணம் அடைந்த) பிடல் காஸ்ட்ரோ ஒரு அட்டைப்பெட்டி நிறைய சுருட்டுகளை முகம்மது அலிக்கு அன்பளிப்பாக அளித்திருந்தார். பிடல் காஸ்ட்ரோவின் கையொப்பத்துடன் கூடிய இந்த சுருட்டுகளும் நல்ல விலைக்கு ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்