முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நான் சந்தித்ததில் மெக்ராத் சிறந்த வேகப்பந்து வீச்சாளர் : டிராவிட் கருத்து

வெள்ளிக்கிழமை, 2 டிசம்பர் 2016      விளையாட்டு
Image Unavailable

மும்பை  - நான் சந்தித்ததில் மெக்ராத்தான் சிறந்த வேகப்பந்து வீச்சாளர் என்று இந்திய அணியின் தடுப்புச் சுவர் என்று அழைக்கப்படும் டிராவிட் கூறியுள்ளார்.

இந்தியாவின் தடுப்புச்சுவர்
இந்திய டெஸ்ட் அணியின் தடுப்புச்சுவர் என்று அழைக்கப்பட்டவர் ராகுல் டிராவிட். வெளிநாட்டு மண்ணில் மற்ற வீரர்கள் அனைவரும் விரைவில் அவுட்டாகிச் செல்லும்போது அணியை டிரா நோக்கியோ, கவுரவமான ஸ்கோரை நோக்கியோ அழைத்துச் செல்வது டிராவிட்டுதான். இதனால்தான் அவரை தடுப்புச் சுவர் என்று அழைத்தனர்.

மெக்ராத் சிறந்த வீரர்
இந்நிலையில், தான் விளையாடிய காலத்தில் சந்தித்த வேகப்பந்து வீச்சாளர்களில் தலைசிறந்தவர் மெக்ராத்துதான் என்று டிராவிட் கூறியுள்ளார். இதுகுறித்து ராகுல் டிராவிட் மேலும் கூறுகையில்., ‘‘என்னுடைய கிரிக்கெட் விளையாட்டு காலத்தில் ஆஸ்திரேலியா மிகச்சிறந்த அணியாக விளங்கியது. அந்த அணியின் அனைத்து வீரர்களும் சிறந்த பந்து வீச்சாளர்கள். ஒருவர் மட்டும் சிறந்த பந்து வீச்சாளர் என்று சொல்ல முடியாது. ஆனால், நான் எதிர்த்து விளையாடியதில் மெக்ராத்துதான் சிறந்த வேகப்பந்து வீச்சாளர். அவர் ஒரு திறமையான பந்து வீச்சாளர்.

ஆப் ஸ்டம்பிற்கு நேராக துல்லியமாக பந்து வீசும் திறமை படைத்தவர் என்று நான் கூறுவதை யாரும் மறுக்க இயலாது. எந்தவொரு பேட்ஸ்மேனுக்கும் பாவம் புண்ணியம் பார்க்கமாட்டார். குறிப்பாக ஆட்டத்தின் முதல் ஒரு மணி நேரம், ஆட்டம் முடிவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் பேட்ஸ்மேன்களுக்கு எந்த வகையிலும் வாய்ப்பு கொடுக்க மாட்டார்’’ என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்