முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கச்சத்தீவு கோவில் விழாவுக்கு அனுமதி மறுப்பு: ராமதாஸ் கண்டனம்

சனிக்கிழமை, 3 டிசம்பர் 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை, கச்சத்தீவு கோவில் விழாவில் கலந்து கொள்ள தமிழக மீனவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதற்கு பா.ம.க நிறுவன தலைவர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பா.ம.க நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கச்சத்தீவில் புதிதாக கட்டப்பட்டுள்ள புனித அந்தோணியார் கோவிலில் வரும் 7ஆம் தேதி நடைபெற உள்ள அர்ச்சிப்பு நிகழ்ச்சியில் தமிழக மீனவர்கள் பங்கேற்க மத்திய அரசு அனுமதி மறுத்திருக்கிறது. கச்சத்தீவில் தமிழக மீனவர்களுக்கு உள்ள உரிமைகளை மறுக்கும் இந்த செயல் கண்டிக்கத்தக்கது. ராமநாதபுரம் மன்னர்களின் ஆளுகையில் இருந்து, 1974-ம் ஆண்டில் மத்திய அரசால், தமிழக மக்களின் ஒப்புதல் இல்லாமல் இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்ட கச்சத்தீவில் புனித அந்தோணியார் தேவாலயம் உள்ளது. இந்த தேவாலயத்தை ராமேஸ்வரத்தைச் சேர்ந்த சீனிக்குப்பன் படையாச்சி என்பவர் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கட்டினார்.தற்போது அங்கு புதிய அந்தோணியார் கோவில் கட்டப்பட்டு, அதன் அர்ச்சிப்பு விழா வரும் 7ஆம் தேதி நடைபெறவுள்ளது.

தமிழக மீனவர்களை அனுமதிக்கும்படி மத்திய வெளியுறவு அமைச்சகத்திற்கு தமிழக தலைமைச் செயலாளரும் கடிதம் எழுதினார். ஆனால், இக்கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்து விட்டது.புதிய அந்தோணியார் கோவிலில் சிறிய அளவில் தான் விழா நடப்பதாகவும், அதில் பங்கேற்க இலங்கையை சேர்ந்த பக்தர்கள் எவரும் அனுமதிக்கப்படவில்லை எனும் நிலையில் தமிழக மீனவர்களை பங்கேற்க அனுமதிக்க இயலாது என்றும் இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது. கச்சத்தீவில் புதிய அந்தோணியார் தேவாலயத்தை வேண்டுமானால் இலங்கையை சேர்ந்தவர் கட்டியிருக்கலாம். ஆனால், கச்சத்தீவு காலம் காலமாக தமிழக மீனவர்களின் கட்டுப்பாட்டில் இருந்த நிலப்பகுதியாகும்.

இலங்கையைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றால் மட்டுமே தமிழகத்தைச் சேர்ந்தவர்களும் பங்கேற்க முடியும் என்று எந்த கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை. கச்சத்தீவு தொடர்பாக இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே செய்து கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தத்தில் புனித அந்தோணியார் கோவில் திருவிழாக்களில் ராமநாதபுரம் மீனவர்கள் கலந்து கொள்ளலாம் என தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.வழக்கமாக மார்ச் மாதத்தில் நடைபெறும் விழாவில் தான் பங்கேற்க வேண்டும் என்றோ, மற்ற காலங்களில் நடக்கும் விழாக்களில் கலந்து கொள்ளக் கூடாது என்றோ அதற்கு அரசு அர்த்தம் கற்பிக்கக் கூடாது.கச்சத்தீவில் நடைபெறும் விழாக்கள் தமிழக மீனவர்களின் உணர்வுடன் கலந்த ஒன்று என்பதால், 7 ஆம் தேதி நடைபெறவுள்ள கச்சத்தீவு புதிய அந்தோணியார் தேவாலயத்தின் அர்ச்சிப்பு விழாவில் பங்கேற்க ராமேஸ்வரம் மற்றும் அதன் சுற்றுப்பகுதி மக்களை மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago