முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கச்சத்தீவு தேவாலய திறப்பு விழாவில் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொள்ள ஏற்பாடு: பொன்.ராதாகிருஷ்ணன்

சனிக்கிழமை, 3 டிசம்பர் 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை, கச்சத்தீவு தேவாலய திறப்பு விழாவிற்கு தமிழகத்தை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொன்.ராதாகிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார்.

கச்சத்தீவில் புதிதாக கட்டப்பட்டுள்ள அந்தோணியார் கோவில் திறப்பு விழாவுக்கு தமிழக பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி இல்லை. இந்த பிரச்சினை தமிழக பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதுபற்றி மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

இந்த வி‌ஷயம் பற்றி வெளியுறவுத்துறையை தொடர்பு கொண்டு பேசினேன். கச்சத்தீவில் நடக்கப்போவது புதிய தேவாலய திறப்பு விழா. அந்த விழாவுக்கு தேவாலயத்தை கட்டிய உபயதாரர்கள் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளார்கள். அதனால்தான் வழக்கமாக செல்லும் இந்திய மற்றும் இலங்கை பக்தர்கள் அழைக்கப்படவில்லை.ஆண்டுதோறும் வழக்கமாக நடைபெறும் திருவிழா மார்ச் மாதம் நடைபெறும் அப்போது வழக்கம் போல் இரு நாட்டு பக்தர்களும் கலந்து கொள்ள எந்த தடையும் இல்லை என்று கூறி இருக்கிறார்கள்.எனவே புதிதாக இந்த ஆண்டு மட்டுமே நடத்தப்படும் சர்ச் திறப்பு விழாவில் வழக்கம் போல் பக்தர்கள் கலந்து கொள்ள தேவை இல்லை என்று முடிவு செய்துள்ளார்கள்.இருந்தாலும் தமிழகத்தை சேர்ந்த மிக முக்கியமான சிலர் தற்போது நடைபெற உள்ள சர்ச் திறப்பு விழாவிலும் கலந்து கொள்ள செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்