முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியப் பெருங்கடலில் சீன நீர்மூழ்கி கப்பல்கள் : எந்த சவாலையும் சந்திக்க தயார் : இந்தியா திட்டவட்டம்

சனிக்கிழமை, 3 டிசம்பர் 2016      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி   - இந்திய பெருங்கடல் பகுதியில் சீன நீர்மூழ்கி போர்க்கப்பல்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளதையடுத்து, இந்தியா தனது பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது. எந்த சவாலையும் சமாளிக்க தயாராக இருப்பதாக கடற்படை அதிகாரிகள் உறுதிபட தெரிவித்துள்ளனர்.

தீவிரவாதிகள் ஊடுருவும் அபாயம்: கடந்த சில நாட்களாக இந்திய பெருங்கடல் பகுதியில் சீன நீர்மூழ்கி போர்க்கப்பல்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதேபோன்று, கடல்மார்க்கமாக தீவிரவாதிகள் ஊடுருவும் அபாயமும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், இந்திய கடற்படை எந்த சவாலையும் சந்திக்க தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது. இதனை தெரிவித்த கடற்படை தலைமை தளபதி அட்மிரல் சுனில் லன்பா, சீன நீர்மூழ்கி கப்பல்கள் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், எந்த சவாலையும் சந்திக்க இந்திய கடற்படை தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

கடற்படை முழு  உஷார்:
உரி தாக்குதல் போன்ற தீவிரவாதிகளின் தாக்குதல்கள் மீண்டும் நிகழாமல் தடுக்கவும், நாட்டுக்கு அச்சுறுத்தல் ஏற்படாமல் தவிர்க்கவும் கடற்படை முழு விழிப்புடன் இருப்பதாகவும், எந்த அவசர நிலைமை ஏற்பட்டாலும் அதனை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். சீன நீர்மூழ்கி போர்க்கப்பல்களின் நடமாட்டம் குறித்து டெல்லியில் உள்ள கடற்படை தலைமையகத்திற்கு எச்சரிக்கை செய்தி அனுப்பப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக அந்தமான் நிகோபார் பகுதிகளில் இக்கப்பல்களின் நடமாட்டம் குறித்து பெரும் கவலை ஏற்பட்டுள்ளதாகவும் கடற்படை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்