முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸ்திரேலியா–நியூசிலாந்து மோதும் முதல் ஒருநாள் போட்டி : சிட்னியில் இன்று தொடங்குகிறது

சனிக்கிழமை, 3 டிசம்பர் 2016      விளையாட்டு
Image Unavailable

சிட்னி  - ஆஸ்திரேலியா–நியூசிலாந்து மோதும் முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி சிட்னியில் இன்று நடக்கிறது.ஒரு நாள் கிரிக்கெட்
நியூசிலாந்து கிரிக்கெட் அணி குறுகிய கால சுற்றுப்பயணமாக ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ளது. அங்கு சேப்பல்–ஹாட்லி கோப்பைக்கான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஆடுகிறது. இதன்படி முதலாவது ஒரு நாள் போட்டி சிட்னியில் இன்று நடக்கிறது.

டெய்லருக்கு ஓய்வு
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2–0 என்ற கணக்கில் வென்ற கையோடு மறுநாளே நியூசிலாந்து வீரர்கள் ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டு விட்டனர். அதனால் இங்குள்ள சூழலுக்கு ஏற்ப தங்களை சீக்கிரம் மாற்றிக்கொள்ள வேண்டியது அவசியமாகும். கண்பிரச்சினை காரணமாக ராஸ் டெய்லருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ஆடம் மில்னே, மெக்லெனஹான், கோரி ஆண்டர்சன் ஆகியோர் காயத்தால் இடம் பெறவில்லை. சுழற்பந்து வீச்சாளர் டாட் ஆஸ்டில், மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசக்கூடிய லோக்கி பெர்குசன் ஆகிய புது வரவுகளை நியூசிலாந்து துருப்பு சீட்டாக பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.
ஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரை உள்ளூரில் எப்போதும் சவால் மிக்க அணி என்பதில் சந்தேகமில்லை. அண்மையில் சொந்த மண்ணில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்த ஆஸ்திரேலியா இந்த தொடரின் மூலம் வெற்றிப்பாதைக்கு திரும்ப முயற்சிக்கும்.

தரவரிசை மாறுமா?
ஐ.சி.சி. ஒரு நாள் போட்டி அணிகளின் தரவரிசையில் தற்போது முதல் 4 இடங்களில் முறையே ஆஸ்திரேலியா (118 புள்ளி), தென்ஆப்பிரிக்கா (116 புள்ளி), நியூசிலாந்து (112 புள்ளி), இந்தியா (111 புள்ளி) ஆகிய அணிகள் உள்ளன. இந்த தொடரை ஆஸ்திரேலியா முழுமையாக வென்றால் அதன் புள்ளி எண்ணிக்கை 120 ஆக உயரும். நியூசிலாந்து 109 புள்ளிகளுடன் 4–வது இடத்துக்கு தள்ளப்படும். அதே சமயம் நியூசிலாந்து 3–0 என்ற கணக்கில் கைப்பற்றினால் ஆஸ்திரேலிய அணி 115 புள்ளிகளுடன் 2–வது இடத்துக்கு இறங்கும். நியூசிலாந்தின் புள்ளி எண்ணிக்கை 115 ஆக இருக்கும்.
ஆஸ்திரேலிய அணி 2–1 என்ற கணக்கில் வென்றால் அதன் புள்ளிகள் 119 ஆக இருக்கும். நியூசிலாந்து 111 புள்ளிகளுடன் 4–வது இடத்துக்கு சரியும். மொத்தத்தில் ஆஸ்திரேலிய அணி ‘நம்பர் ஒன்’ இடத்தை தக்க வைக்க குறைந்தது ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற்றாக வேண்டும். ஆஸ்திரேலியா–நியூசிலாந்து அணிகள் இதுவரை 130 ஒரு நாள் போட்டிகளில் நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் 87–ல் ஆஸ்திரேலியாவும், 37–ல் நியூசிலாந்தும் வெற்றி பெற்றன. 6 ஆட்டத்தில் முடிவு இல்லை.

இரு அணி வீரர்கள் வருமாறு:
ஆஸ்திரேலியா
ஸ்டீவன் சுமித் (கேப்டன்), டேவிட் வார்னர், ஜார்ஜ் பெய்லி, ஹில்டன் கார்ட்ரைட், கம்மின்ஸ், ஜேம்ஸ் பவுல்க்னெர், ஆரோன் பிஞ்ச், ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், மேக்ஸ்வெல், மிட்செல் ஸ்டார்க், மேத்யூ வேட், ஆடம் ஜம்பா.

நியூசிலாந்து
வில்லியம்சன் (கேப்டன்), டாட் ஆஸ்டில், டிரென்ட் பவுல்ட், காலின் டி கிரான்ட்ஹோம், லோக்கி பெர்குசன், மாட்டின் கப்தில், மேட் ஹென்ஹி, டாம் லாதம், காலின் முன்ரோ, ஜேம்ஸ் நீஷம், ஹென்ஹி நிகோல்ஸ், மிட்செல் சான்ட்னெர், டிம் சவுதி, வாட்லிங்.
இந்திய நேரப்படி காலை 8.50 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ்2 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago