முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆசிய கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணிக்கு கிரிக்கெட் வாரியம் பாராட்டு

திங்கட்கிழமை, 5 டிசம்பர் 2016      விளையாட்டு
Image Unavailable

மும்பை : பாங்காங்கில் நடைபெற்று வந்த ஆசிய கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய பெண்கள் அணிக்கு கிரிக்கெட் வாரியம் பாராட்டு தெரிவித்துள்ளது.

6 முறை சாம்பியன்

6 நாடுகள் பங்கேற்ற ஆசிய கோப்பை மகளிர் டி-20 கிரிக்கெட் போட்டி தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் நடந்தது. இதில் இந்திய பெண்கள் சாம்பியன் பட்டம் வென்றது. இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் 17 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்திய அணி சாம்பியன் வெல்வது 6-வது முறையாகும். இதுவரை நடந்துள்ள 6 ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி அனைத்திலும் இந்தியாவே பட்டம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. பெண்கள் ஆசிய கோப்பையில் அனைத்து போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது சிறப்பு அம்சமாகும்.

கிரிக்கெட் வாரியம் பாராட்டு

சாம்பியன் பட்டம் வென்ற இந்திய பெண்கள் அணிக்கு கிரிக்கெட் வாரியம் பாராட்டு தெரிவித்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணி தலைவர் அனுராக் தாகூர் கூறுகையில், வரலாற்று வெற்றி பெற்ற இந்திய மகளிர் அணிக்கு கிரிக்கெட் வாரியம் சார்பில் பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன். ஆசிய கோப்பையை 6-வது முறையாக வென்று ஆசிய கண்டத்தில் முன்னணி அணி என்பதை நிரூபித்து இருக்கிறது. செயலாளர் அஜய் ஷிர்கே கூறுகையில், “அவர்கள் செய்த சாதனைகளுக்கு பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன்” என்றார். இதேபோல் கிரிக்கெட் வீரர்கள் பலரும் பாராட்டுகளை தெரிவித்து உள்ளனர். ஒவ்வொருவரும் பெருமைப்படும் வகையில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி சாதனை படைத்துள்ளது. ஆசிய கோப்பை போட்டியில் தொடர்ந்து வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றி இருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்