புதிய ரூ.100 நோட்டுகள் விரைவில் அறிமுகம் ரிசர்வ் வங்கி அறிவிப்பு

புதன்கிழமை, 7 டிசம்பர் 2016      வர்த்தகம்
Reserve-Bank 2016 12 04

 மும்பை, புதிய ரூ100 நோட்டுகள் விரைவில்  அறிமுகம் செய்யப்படுகிறது என ரிசர்வ் வங்கி தெரிவித்தது.

புதிய ரூ100  நோட்டுகளை  விரைவில் புழக்கத்தில் விடுவதற்காக ஆயத்தப்பணிகள் நடக்கின்றன. பழைய ரூபாய் நோட்டுகளில் இருப்பது போன்று புதிய ரூ100  நோட்டுகளிலும் மகாத்மா காந்தியின் உருவப்படம் பொறிக்கப்பட்டு இருக்கும்.

அதேப்போன்று, நோட்டு அச்சிடப்பட்ட ஆண்டு குறிப்பிடப்பட்டு இருக்கும். 2016 என்ற எண் வரிசையில், பழைய ரூபாய் நோட்டுகளில் இருக்கும் எண்களின் அளவையே ஒத்திருக்கும்.
 
அதே நேரத்தில் புதிய ரூபாய் நோட்டுகளில் அச்சிடப்பட்டுஇருக்கும் மற்ற எண்களும் அடையாள குறியீடுகளும், சற்று பெரிய அளவில் இருக்கும். இந்த நோட்டுகளில் வரிசைகள் கோடுகள் ஏதும் இடம்  பெற்று இருக்காது. பழைய ரூபாய்  நோட்டுகளுடனேயே இந்த புதிய ரூபாய் நோட்டுகளும் புழக்கத்தில் விடப்படும்.


இவ்வாறு ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

ரிசர்வ்  வங்கி ஏற்கனவே, புதிய ரூ20, ரூ50 நோட்டுகளை விரைவில்  அறிமுகப்படுத்தப்படும் என அறிவித்து இருந்தது. தற்போது புதிய ரூ 100 நோட்டுகள் புழக்கத்திற்கு வரவிருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்: