முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெயலலிதா மறைவுக்கு, அதிபர் சிரிசேனா, பிரதமர் ரனில் இரங்கல் : இலங்கை குழுவினர் கடிதத்தை கவர்னரிடம் வழங்கினர்

வியாழக்கிழமை, 8 டிசம்பர் 2016      உலகம்
Image Unavailable

 சென்னை   -  முதலமைச்சர்  ஜெயலலிதா மறைவுக்கு, இலங்கை அதிபர் சிரிசேனா மற்றும் பிரதமர் ரனில் விக்ரமசிங்கே ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இரங்கல் கடிதத்தை தமிழக கவர்னரிடம்  இலங்கை அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவினர் நேற்று நேரில் அளித்தனர்.

முதலமைச்சர்  ஜெயலலிதா மறைவுக்கு, இலங்கை அதிபர் சிரிசேனா மற்றும் பிரதமர் ரனில் விக்ரமசிங்கே ஆகியோர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர். இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்  ஆறுமுகம் தொண்டமான், இலங்கையின் உவா மாகாண பொறுப்பு முதலமைச்சர்  செந்தில் தொண்டமான், மத்திய மாகாண சபையின் வேளாண்துறை அமைச்சர்   எம். ராமேஸ்வரன், இலங்கை துணைத் தூதர்  கிருஷ்ணமூர்த்தி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அமைப்பின் துணைத் தலைவர்  கணேசமூர்த்தி ஆகியோர் அடங்கிய குழுவினர், இலங்கை அதிபர் மற்றும் பிரதமரின் இரங்கல் செய்தியை, தமிழக கவர்னர்   வித்யாசாகர் ராவிடம்  நேற்று நேரில் அளித்தனர். 

அதிபர் சிரிசேனா  இரஙகல் செய்தி: இலங்கை அதிபர் சிரிசேனா அனுப்பியுள்ள இரங்கல் செய்தியில், தமிழக முதலமைச்சர்   ஜெயலலிதா மறைவு குறித்த செய்தியை அறிந்து மிகவும் துயரம் அடைந்ததாக தெரிவித்துள்ளார். முதலமைச்சர்   ஜெயலலிதா, மக்களின் நல்வாழ்வுக்காக தமது வாழ்நாளை முழுமையாக அர்ப்பணித்தவர் - மக்களால் மிகவும் நேசிக்கப்பட்டவர் என்றும் குறிப்பிட்டுள்ளார். மதிப்பிற்குரிய முதலமைச்சர்   ஜெயலலிதா, இந்திய அரசியலில் மிக முக்கியமானவர், தமிழக முதலமைச்சராக 6 முறை தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்றும் சிரிசேனா தெரிவித்துள்ளார்.

இந்தியா மிகப்பெரிய பெண் அரசியல் தலைவரை இழந்து விட்டது - ஏழை மக்களுக்கு உண்மையான தலைவராக திகழ்ந்த அவர், "அம்மா" என மக்களால் அன்போடு அழைக்கப்பட்டார். வேதனையான இத்தருணத்தில், தமிழக மக்களுடன் இணைந்து பிரார்த்தனை செய்வதாகவும் அதிபர் சிரிசேனா தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் ரனில் விக்ரமசிங்கே :

இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கே அனுப்பியுள்ள இரங்கல் செய்தியில், தமிழக மக்களால் பெரிதும் நேசிக்கப்பட்டவரும், மக்களின் நலனை முன்னிறுத்தியவரும், சிறந்த அரசியல் தலைவராகவும், திகழ்ந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு இலங்கை அஞ்சலி செலுத்துகிறது என குறிப்பிட்டுள்ளார்.

தமிழக முதலமைச்சர்  ஜெயலலிதா, தொலைநோக்கு சிந்தனை கொண்ட மிகப்பெரிய தலைவர் - அரசியல் ஞானத்துடனும், தலைசிறந்த தலைமைப் பண்புகளுடனும் திகழ்ந்த அவர், மக்களின் மிக நெருங்கிய தலைவராக விளங்கினார் - மக்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவதுடன், அவர்களுக்கு முன் உதாரணமாகவும் திகழ்ந்தார் - தமிழக மக்களுக்காக முதலமைச்சர்   ஜெயலலிதா மேற்கொண்ட அனைத்து நடவடிக்கைகளிலும், தன்னலம் இல்லாமல் மக்களுக்காகவே செயல்பட்டதால், அவர் மக்களின் தாயாகவே திகழ்ந்தார் - மிகப் பெரிய இழப்பு ஏற்பட்டுள்ள இந்த நேரத்தில், இலங்கை மக்களின் சார்பாகவும், அரசின் சார்பாகவும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்வதாக இலங்கை பிரதமர் குறிப்பிட்டுள்ளார். 

ஜெர்மனி நாட்டின் தூதர் : முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு, சென்னையில் உள்ள ஜெர்மனி நாட்டின் தூதர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இரங்கல் கடிதத்தை தமிழக கவர்னர்  வித்யாசாகர் ராவுக்கு அனுப்பியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago