முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெயலலிதா இறக்கவில்லை: நம்மோடுதான் இருக்கிறார்- பெண்கள் உருக்கம்

வெள்ளிக்கிழமை, 9 டிசம்பர் 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை, முதலமைச்சர் ஜெயலலிதா இறக்கவில்லை; நம்மோடுதான் இருக்கிறார் என்று அஞ்சலி செலுத்த வந்த பெண்கள் உருக்கமாக பேசினர்.

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல் கடந்த 6-ந்தேதி இரவு எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

அன்று முதல் தொடர்ந்து தொண்டர்கள் பொதுமக்கள் ஜெயலலிதா சமாதியில் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். நேற்று 4 -வது நாளாக கூட்டம் அலை மோதியது.இதையடுத்து தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் வரிசையில் சென்று அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டனர்.அவர்கள் மலர்களை தூவி கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். பெண்கள் பலர் கதறி அழுதபடி அம்மா என்று துடித்தனர்.

இன்றும் ஜெயலலிதா சமாதியில் அஞ்சலி செலுத்த பொதுமக்கள் குவிந்தனர். அவர்களை போலீசார் வரிசையில் அனுப்பினார்கள். ஆயிரக்கணக்கானோர் திரண்டதால் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய பொதுமக்கள் மலர்களை தூவினர்.அப்போது பெண்கள் ஜெயலலிதாவை நினைவு கூர்ந்து உருக்கமாக பேசினார்கள்.

சங்கீதா- ரவியம்மா (போரூர்):- அம்மா இறந்த செய்தி அறிந்ததும் நாங்கள் துயரம் அடைந்தோம். ஆனால் அவர் இறந்து விட்டார் என்று நினைக்கவில்லை. அவர் நம்மோடுதான் இருக்கிறார். அம்மாவின் ஆத்மா இங்குதான் இருக்கிறது. நாங்கள் தொடர்ந்து 4-வது நாளாக அஞ்சலி செலுத்த வந்து இருக்கிறோம். அவரது சமாதியில் பெரிய நினைவிடம் அமைத்து அம்மாவின் சாதனை, தைரியம் ஆகியவற்றுக்கு முன் உதாரணமாக இருக்க வழிவகை செய்ய வேண்டும்.

ஐதராபாத்தைச் சேர்ந்த ஸ்ரீகலா:- நான் முதல்-அமைச்சர் அம்மாவை பற்றி கேள்விப்பட்டு இருக்கிறேன். அவர் செய்யும் ஒவ்வொரு விஷயமும் எனக்கு பிடிக்கும். அவரது திடீர் மறைவு மிகவும் வேதனையை அளித்தது. அவருக்கு அஞ்சலி செலுத்த கணவர், குழந்தைகளுடன் ஐதராபாத்தில் இருந்து சென்னைக்கு வந்தேன். அஞ்சலி செலுத்திய பிறகு எனக்கு நிம்மதியாக உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago