முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் - அமைச்சர்கள்- அ.தி.மு.க.வினருடன் ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா அஞ்சலி

வெள்ளிக்கிழமை, 9 டிசம்பர் 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் அவரது உயிர்த்தோழி சசிகலா, முதல்வர் ஒ.பன்னீர்செல்வம், அமைச்சர்களுடன் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்,

மக்கள் அஞ்சலி

முதல்வர் ஜெயலலிதா கடந்த 5-ம் தேதி இரவு 11-30 மணிக்கு காலமானார். இந்த அதிர்ச்சி செய்தியால் தமிழகமே சோகத்தில் மூழ்கியது. இதைத்தொடர்ந்து அவரது உடல் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து போயஸ்கார்டன் கொண்டு செல்லப்பட்டு இறுதிச்சடங்குகள் மேற்கொள்ளப்பட்டன. இதனையடுத்து ராஜாஜி மண்டபத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட மறைந்த முதல்வர் ஜெயலலிதா உடலுக்கு தலைவர்கள், லட்சக்கணக்கான மக்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

இதைத்தொடர்ந்து ஜெயலலிதாவின் உடல், எம்,.ஜி.ஆர் நினைவிடத்தின் அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சிகளில் பத்துலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு மறைந்த முன்னாள் முதல்வருக்கு மரியாதை செலுத்தினர், இந்த நிலையில் ஜெயலலிதாவின் மறைவால் பேருந்து போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியது. இதன் காரணமாக தலைநகருக்கு வரமுடியாமல் தவித்த மக்கள், மறுநாள் முதல் ஜெயலலிதா நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் குவியத்தொடங்கினர். ஒவ்வொரு நாளும் விடிய, விடிய மறைந்த ஜெயலலிதாவுக்கு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் அஞ்சலி செலுத்தினர், கற்பூர ஆராதனை செய்தும் தேங்காய் உடைத்தும் பொதுமக்கள் குழந்தைகளுடன் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்,

சசிகலா - முதல்வர் அஞ்சலி

இந்த நிலையில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உயிர்த்தோழி சசிகலா நேற்று மாலை 6 மணிக்கு கடற்கரையில் உள்ள எம்,.ஜி.ஆர் நினைவிடத்தில் அமைக்கப்பட்ட ஜெயலலிதா நினைவிடத்திற்கு வந்தார். அங்கு கண்ணீருடன் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். முதல்வர் ஜெயலலிதா நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தை சுற்றி வந்து சுமார் 45 நிமிடம் அஞ்சலி செலுத்தினார். உடன் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், எடப்பாடி பழனிச்சாமி, தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, செல்லூர் கே.ராஜூ உள்ளிட்டவர்களும் அ.தி.மு.க நிர்வாகிகளும் அஞ்சலி  அஞ்சலி செலுத்திய பின்னர் அமைச்சர்களுடன் முதல்வர் பன்னீர்செல்வம், பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். மறைந்த ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைக்கும் பணிகள் குறித்து அவர்கள் கேட்டறிந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்