முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வார்தா புயல் தீவிர புயலாக மாறியது: ஆந்திராவில் கரையை கடக்கும்

சனிக்கிழமை, 10 டிசம்பர் 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை, வார்தா புயல் நாளை 12–-ந் தேதி மாலை ஆந்திராவில் நெல்லூர்–மசூலிப்பட்டினம் இடையே கரையை கடக்கும். அப்போது புயல் வலுவிழக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை கடந்த அக்டோபர் மாதம் 29-ந்தேதி தொடங்கியது.ஆனால் இதுவரை கன மழை பெய்யாததால் ஏரி, குளங்கள், அணைகள் அனைத்தும் வறண்ட நிலையிலேயே உள்ளது. அந்தமான் அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானால்தான் வட தமிழகத்திற்கு மழை கிடைக்கும்.

ஆனால் இதுவரை அப்படி மழை பெய்யவில்லை. பனி பெய்ய தொடங்கி விட்டது. இந்த நிலையில் வங்க கடலில் உருவான ‘வார்தா புயல்’ மெதுவாக ஆந்திரா நோக்கி நகர்ந்து வருகிறது. இதுகுறித்து வானிலை மைய அதிகாரிகள் கூறியதாவது:-–

தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த வார்தா புயல் விசாகப்பட்டினத்துக்கு தென்கிழக்கே 830 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. இந்த புயல் இரவு 11.30 மணியளவில் தீவிர புயலாக மாறி உள்ளது. இது மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வருகிறது.

நாளை 12–-ந் தேதி மாலை ஆந்திராவில் நெல்லூர்–மசூலிப்பட்டினம் இடையே கரையை கடக்கும். அப்போது புயல் வலுவிழக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மழை அதிகம் பெய்யும். கடல் கொந்தளிப்புடன் காணப்படும். எனவே மீனவர்கள் யாரும் ஆந்திரா கடல் பகுதிக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம். சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில நேரங்களில் விட்டுவிட்டு மழை பெய்யும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்