முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாலமன் தீவில் நிலநடுக்கம்

சனிக்கிழமை, 10 டிசம்பர் 2016      உலகம்
Image Unavailable

 பப்புவா நியூ கினி  - சாலமன் தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பப்புவா நியூ கினி அருகில் சுமார் ஆயிரம் தீவுகளைக் கொண்ட நாடு சாலமன் தீவு. அங்கு  கடலுக்கு அடியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அலகில் 7.7 ஆகப் பதிவானது. உடனடியாக பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் சுனாமி எச்சரிக் கையை வெளியிட்டது.

சாலமன் தீவு பகுதிகளில் சுமார் 3 அடி உயரத் துக்கு கடல் அலைகள் எழுப்பின. எனினும் உயிரிழப்பு ஏற்படவில்லை.கடலோரம் இருந்த சில வீடுகள் மட்டும் சேதமடைந்துள்ளன. நில நடுக்கப் பகுதிகளில் மின் விநி யோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதேபோல அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியா கடல் பகுதி யிலும் நேற்று முன்தினம் நிலநடுக் கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அலகில் 6.5 ஆகப் பதிவானது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்