முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்த வந்த தொண்டர்களுக்கு சசிகலா ஆறுதல்

சனிக்கிழமை, 10 டிசம்பர் 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை, போயஸ் தோட்ட இல்லத்தில் ஜெயலலிதா படத்துக்கு அஞ்சலி செலுத்தி கதறி அழுத பொதுமக்கள், தொண்டர்களுக்கு சசிகலா ஆறுதல் கூறினார்.

ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தில் அவரது படம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. கடந்த 5 தினங்களாக ஆயிரக்கணக்கான பொதுமக்களும், தொண்டர்களும் கண்ணீர் அஞ்சலி செலுத்திய வண்ணம் உள்ளனர்.

நேற்று காலை ஜெயலலிதா படத்துக்கு சசிகலா மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அதனை அடுத்து முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அனைத்து அமைச்சர்களும் மலர் தூவி கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள்.

இதனை தொடர்ந்து ஏராளமான தொண்டர்களும், பொதுமக்களும் வரிசையாக வந்து அஞ்சலி செலுத்தியவண்ணம் இருந்தனர். ஜெயலலிதா படம் அருகே நின்ற சசிகலா கதறி அழுத பொதுமக்களுக்கும், தொண்டர்களுக்கும் ஆறுதல் கூறினார். சசிகலா கையை பிடித்துக கொண்டு தாய்மார்கள், ‘‘அம்மா எங்களை விட்டுட்டு போயிட்டாங்களே’’ என்று கதறி அழுதனர். ஒவ்வொருவருக்கும் சசிகலா ஆறுதல் கூறினார். கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு நேற்று போயஸ் தோட்ட இல்லத்துக்கு வந்து ஜெயலலிதா படத்துக்கு மலர் அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர்கள் சசிகலாவை சந்தித்து ஜெயலலிதா மறைவுக்கு தங்களது அனுதாபத்தை தெரிவித்து சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தனர். அவருடன் மாநில செயலாளர் முத்தரசன் மற்றும் நிர்வாகிகள் மலர் அஞ்சலி செலுத்தினார்கள். தொடர்ந்து ஜெயலலிதா படத்துக்கு தெண்டர்களும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்திய வண்ணம் உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago