முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீவிரவாதிகளை அனுமதிக்க கூடாது : பாகிஸ்தானுக்கு அமெரிக்கா மீண்டும் எச்சரிக்கை

சனிக்கிழமை, 10 டிசம்பர் 2016      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்  - பாகிஸ்தான் மண்ணில் தீவிரவாதி களுக்கு இடம் அளிக்கக்கூடாது என்று அமெரிக்கா மீண்டும் எச் சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவில் அண்மையில் நடந்த ‘ஆசியாவின் இதயம்’ மாநாட் டில் பேசிய இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனியும் தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் அளிப் பதாக குற்றம் சாட்டினர். அமெரிக் காவும் இதே குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. 

வெளியுறவு செய்தித் தொடர்பாளர்  பேட்டி :
இதுதொடர்பாக அந்த நாட்டின் வெளியுறவு செய்தித் தொடர்பாளர் மார்க் டோனர், வாஷிங்டனில் நிருபர் களிடம் கூறியதாவது: தலிபான்களின் பிரதான அமைப் பான ஹக்கானி குழு பாகிஸ்தான் மண்ணில் பல்வேறு தீவிரவாத முகாம்களை அமைத்து ஆப்கானிஸ் தானுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது. இதுதொடர்பாக பாகிஸ் தான் அரசிடம் எங்கள் கவலையை தெரிவித்துள்ளோம்.

ஆப்கானிஸ்தானும் பாகிஸ் தானும் இணைந்து செயல்பட்டால் தான் தீவிரவாதிகளை அழிக்க முடியும். இதற்கு பாகிஸ்தான் அரசு ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை நல்க வேண்டும். தீவிரவாத குழுக்களை அழித்தால்தான் ஆப்கானிஸ்தானில் அமைதியை நிலைநாட்ட முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்